AI-ஆல் வங்கிகளுக்கு பாதிப்பு? ”இனி இதை மட்டும் செய்யாதீங்க!” - OpenAI CEO சாம் ஆல்ட்மன் வார்னிங்
வாஷிங்டனில் நடந்த பெடரல் ரிசர்வ் மாநாட்டில் சாம் ஆல்ட்மேன் பேசினார். அப்போது செயற்கை நுண்ணறிவு குறித்து தகவல்களை பகிர்ந்து கொண்டார். அதில் ’வரவிருக்கும் மோசடி குறித்து நான் மிகவும் பதட்டமாக இருக்கிறேன்’ என்று ஆல்ட்மேன் கூறினார். தற்போதும் நிறைய நிதி நிறுவனங்கள் authentication-க்கு ஆக voiceprint-ஐ ஏற்றுக்கொள்ளும் நடைமுறை உள்ளது. இன்னும் அதை செய்து கொண்டிருப்பது ஆபத்தானது. AI அதை முழுமையாக தோற்கடித்துவிட்டது.
பணக்கார வங்கி வாடிக்கையாளர்களுக்கான authentication ஆக voiceprint-ஐ ஏற்றுக்கொள்வது சில ஆண்டுகளுக்கு முன்னர் பிரபலமடைந்தது. வாடிக்கையாளர்கள் பொதுவாக தங்கள் கணக்குகளை அணுக தொலைபேசியில் challenge phrase உச்சரிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டனர்.
ஆனால் இப்போது AI வருகையால் குரல் குளோன்களும், வீடியோ குளோன்களும் உண்மையை போலவே உருவாக்கப்படும். உண்மையிலிருந்து வேறுபடுத்திப் பார்க்க முடியாத அளவு இருக்கும். தனது நிறுவனம் இதுபோன்ற ஆள்மாறாட்டக் கருவிகளை உருவாக்கவில்லை என்றாலும், AI தொடர்ந்து வளர்ச்சியடைந்து வருவதால், உலகம் விரைவில் எதிர்கொள்ள வேண்டிய ஒரு சவாலாக இது இருக்கும் என்று அவர் எச்சரித்தார். இதனால் வங்கித்துறையில் பாதுகாப்பு அம்சங்கள் AI -ஆல் தோற்கடிக்கப்படலாம். எனவே பாதுகாப்பு அம்சங்களை மேம்படுத்த வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
கடந்த ஆண்டு இந்த AI குரல் மற்றும் வீடியோ "குளோனிங்" மோசடிகள் குறித்து FBI எச்சரிக்கை விடுத்தது இருந்தது. தங்கள் குழந்தைகள் சிக்கலில் இருப்பதாக நம்ப வைத்து பணத்தை ஏமாற்றும் முயற்சிகளில் AI குரல் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டதாக பல பெற்றோர்கள் புகார் அளித்ததாக FBI குறிப்பிட்டு இருந்தது.