அசோக்குமார்
அசோக்குமார்pt desk

திருச்சி | சரித்திரப் பதிவேடு ரவுடி சரமாரியாக வெட்டிப் படுகொலை - 5 பேர் மீது வழக்குப் பதிவு

கல்லணை அருகே சரித்திரப் பதிவேடு ரவுடி சரமாரியாக வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் உள்ளிட்ட 5 பேர் மீது வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார், விசாரணை நடத்தி வருகின்றனர்.
Published on

செய்தியாளர்: வி.சார்லஸ்

திருச்சி மாவட்டம், கல்லணை அருகே உள்ள கிளிக்கூடு பகுதியைச் சேர்ந்த கண்ணன் என்பவரை கடந்த 2020ஆம் வருடம் முன்விரோதம் காரணமாக அதே பகுதியைச் சேர்ந்த பிரகாஷ் அவரது நண்பர்களுடன் சேர்ந்து கொலை செய்ததாகக் கூறப்படுகிறது. இதன் தொடர்ச்சியாக 2022ஆம் வருடம் பிரகாஷை கண்ணன் உறவினரான அசோக்குமார் தனது நண்பர்களுடன் கொலை செய்துள்ளார்.

murder
murderபுதிய தலைமுறை

இந்நிலையில், கிளிக்கூடு கிராமத்தில் கடந்த 23ம் தேதி முதல் 26ம் தேதி வரை 2022ஆம் வருடம் கொலையுண்ட கபடி வீரர் பிரகாஷ் என்பவரின் நினைவாக அவரது உறவினர்கள் மற்றும் நண்பர்கள் ஒன்று சேர்ந்து நம்பர் ஒன் பாய்ஸ் கபாடி குழு என்ற பெயரில் கபடி போட்டியை நடத்தியுள்ளனர். இந்த போட்டியை அதே பகுதியைச் சேர்ந்த முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் பாலகிருஷ்ணன் மகன் பிரவீன் முன்நின்று நடத்தியதாக கூறப்படுகிறது.

அசோக்குமார்
கள்ளக்குறிச்சி | வெடி மருந்து மற்றும் நாட்டுத் துப்பாக்கியை பதுக்கி வைத்திருந்த நபர் கைது

இதனையடுத்து நேற்று இரவு கிளிக்கூடு பிள்ளையார் கோயில் தெருவைச் சேர்ந்த பாண்டியன் மகன் சரித்திர பதிவேடு ரவுடி அசோக்குமார் (40), அவரது நண்பர்களுடன் குடிபோதையில் பிரவீன் வீட்டு முன் நின்று தகராறில் ஈடுபட்டுள்ளார். இதனை பிரவீன், அவரது சகோதரர் பிரபு, தந்தை பாலகிருஷ்ணன் மற்றும் உறவினர்கள் இரண்டு பேர் என ஐந்து பேர் தட்டிக் கேட்டுள்ளனர்.

அசோக்குமார்
நாகை | இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதிய விபத்து – 3 இளைஞர்கள் உயிரிழப்பு

இதனால் இரு தரப்பினருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டு கைகலப்பாகியுள்ளது. இதில், ஆத்திரமடைந்த பிரவீன் தரப்பினர் அசோக்குமாரை சரமாரியாக அரிவாளால் வெட்டியுள்ளனர். இதில் படுகாயமடைந்த அசோக்குமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து சம்பவத்தில் ஈடுபட்ட பிரவீன், பிரபு, பாலகிருஷ்ணன் உள்ளிட்ட 5 பேரும் சம்பவ இடத்திலிருந்து தப்பியோடி விட்டனர்.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த கொள்ளிடம் போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அசோக்குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த கொலை சம்பவம் குறித்து கொள்ளிடம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com