கள்ளக்குறிச்சி | வெடி மருந்து மற்றும் நாட்டுத் துப்பாக்கியை பதுக்கி வைத்திருந்த நபர் கைது
செய்தியாளர்: பாலாஜி
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ள வரகூர் ஊராட்சிக்கு உட்பட்ட செல்லக்கா குப்பம் காட்டுக்கொட்டாய் பகுதியைச் சேர்ந்த துரை என்ற அருள்தாஸ் என்பவர் சட்டத்திற்கு புறம்பாக அரசால் தடை செய்யப்பட்ட வெடி மருந்து மற்றும் நாட்டுத் துப்பாக்கியை பயன் படுத்துவதாக சங்கராபுரம் காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது,
இந்த தகவலின் பெயரில் காவல் ஆய்வாளர் விநாயக முருகன் தலைமையிலான போலீசார், துரை என்ற அருள்தாஸ் வீட்டை சோதனை செய்தனர். அப்போது அங்கு தடை செய்யப்பட்ட நாட்டுத் துப்பாக்கி மற்றும் அதற்கு பயன்படுத்தக் கூடிய வெடி மருந்து பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது,
இதனையடுத்து நாட்டுத் துப்பாக்கி மற்றும் வெடி மருந்துகளை பறிமுதல் செய்த போலீசார், அருள்தாஸை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.