பிளஸ் 2 தேர்வு முடிவுகள் - தேர்ச்சி விகிதம் அடிப்படையில் டாப் 5-ல் இடம்பிடித்த மாவட்டங்கள் எவை?

தமிழ்நாட்டில் இன்று காலை வெளியான +2 தேர்வு முடிவுகளில், தேர்ச்சி விகித அடிப்படையில் டாப் 5-ல் இடம்பிடித்த மாவட்டங்கள் பற்றிய விவரங்கள் இதோ!
 +2 தேர்வு முடிவுகள்
+2 தேர்வு முடிவுகள்புதிய தலைமுறை

தமிழ்நாட்டில் கடந்த மார்ச் 1ஆம் தேதி முதல் மார்ச் 22ஆம் தேதி வரை நடைபெற்ற பிளஸ் 2 பொதுத்தேர்வை சுமார் 7 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதினர். பிளஸ் 2 விடைத்தாள்கள் திருத்தும் பணி ஏப்ரல் மாதத்தில் நிறைவுபெற்ற நிலையில் தேர்வு முடிவுகள் இன்று காலை 9.30 மணி அளவில் வெளியாகியுள்ளது.

கடந்த கல்வி ஆண்டான 2022 - 2023 ல் 94.30% பேர் தேர்ச்சி பெற்ற நிலையில், இந்த கல்வியாண்டான 2023 - 24ல் 94.56% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். ஆக, கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு சற்று அதிக தேர்ச்சி விகிதம் பதிவாகியுள்ளது. மேலும், இந்த ஆண்டும் வழக்கம் போல் மாணவர்களை விட மாணவிகளே அதிக தேர்ச்சி பெற்றுள்ளனர்.

 +2 தேர்வு முடிவுகள்
வெளியானது +2 தேர்வு முடிவுகள்... தேர்ச்சி விகிதம் என்ன?

தேர்ச்சி விகிதத்தில், டாப் 5-ல் இடம்பிடித்த மாவட்டங்கள் லிஸ்ட்...

இதில் திருப்பூர் முதலிடத்தை பெற்றுள்ளது.

திருப்பூர் - 97.45%

சிவகங்கை- 97.42%

ஈரோடு - 97.42%

அரியலூர் - 97.25%

கோவை 96.97%

பேர் தேர்ச்சி பெற்று அசத்தியுள்ளனர்.

கடைசி 5 இடங்களை பெற்ற மாவட்டங்கள்...

திருவண்ணாமலை மாவட்டம் கடைசி இடம் பிடித்துள்ளது.

காஞ்சிபுரம் - 92.28%

கிருஷ்ணகிரி - 91.87%

திருவள்ளூர் - 91.32%

நாகை - 91.19%

திருவண்ணாமலை - 90.47%

பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

 +2 தேர்வு முடிவுகள்
+2 தேர்வு முடிவுகள் | “மார்க் மட்டும் வாழ்க்கையில்ல” - மாணவர்களுக்கு ஊக்கமளிக்கும் நந்தகுமார் IRS

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com