வெளியானது +2 தேர்வு முடிவுகள்... தேர்ச்சி விகிதம் என்ன?

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் +2 தேர்வு முடிவுகள் காலை 9.30 மணி அளவில் வெளியாகியுள்ளது.
 +2 தேர்வு முடிவுகள்
+2 தேர்வு முடிவுகள்முகநூல்

தமிழ்நாட்டில் கடந்த மார்ச் 1ஆம் தேதி முதல் மார்ச் 22ஆம் தேதி வரை நடைபெற்ற பிளஸ் 2 பொதுத்தேர்வை சுமார் 7 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதினர். பிளஸ் 2 விடைத்தாள்கள் திருத்தும் பணி ஏப்ரல் மாதத்தில் நிறைவுபெற்ற நிலையில் தேர்வு முடிவுகள் இன்று காலை 9.30 மணி அளவில் வெளியாகியுள்ளது.

பிளஸ் 2 தேர்வு முடிவுகள்
பிளஸ் 2 தேர்வு முடிவுகள்முகநூல்

அம்முடிவுகளை, குறுஞ்செய்தி வாயிலாகவும், அரசுத் தேர்வுகள் இயக்ககத்தின் www.tnresults.nic.in என்ற தளத்திலும், www.dge.tn.gov.in தளத்திலும் மாணவர்கள் அறிந்துகொள்ளலாம். வலைதளங்கள் மூலம் தேர்வு முடிவுகளை அறியும் மாணவர்கள் தங்கள் தேர்வு எண் மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றை குறிப்பிட வேண்டும். 

 +2 தேர்வு முடிவுகள்
தமிழ்நாட்டில் இன்று வெளியாகிறது பிளஸ் 2 தேர்வு முடிவுகள்!

புள்ளிவிவரங்களின்படி, தமிழகத்தில் 94.56 % பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர் என்ற அறிவிப்பினை பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ளது. இது கடந்த ஆண்டைவிட சற்று அதிகம். மேலும், இந்த ஆண்டும் வழக்கம் போல் மாணவர்களை விட மாணவிகளே அதிக தேர்ச்சி பெற்றுள்ளனர்.

தேர்ச்சி பெற்றவர்களின் விவரங்கள்

  • 100% தேர்ச்சி பெற்ற அரசுப்பள்ளிகளின் எண்ணிக்கை - 397

  • 100% தேர்ச்சி பெற்ற மேல்நிலைப்பள்ளிகளின் எண்ணிக்கை - 2,478

  • அரசுப்பள்ளிகள் தேர்ச்சி விகிதம் - 91.32%

  • அரசு உதவிப்பெறும் பள்ளிகள் தேர்ச்சி விகிதம் - 95.49%

  • தனியார் பள்ளிகள் தேர்ச்சி விகிதம் - 96.7%

  • மகளிர் பள்ளிகள் தேர்ச்சி விகிதம் - 96.39%

  • ஆண்கள் பள்ளிகள் தேர்ச்சி விகிதம் - 86.96%

  • இருபாலர் பள்ளிகள் தேர்ச்சி விகிதம் - 94.7%

    பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com