#TopNews எகிப்து கப்பலில் தவிக்கும் தமிழர்கள் முதல் முதலமைச்சர் பழனிசாமியின் ஆலோசனை வரை.!
கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 3,600-ஐ நெருங்குகிறது. நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவியுள்ளதாக உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை.
கொரோனாவால் பாதிக்கப்பட்ட காஞ்சிபுரத்தை சேர்ந்தவருக்கு தீவிர சிகிச்சை. முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று ஆலோசனை
கொரோனா குறித்து மக்கள் அச்சப்படத் தேவையில்லை என சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல். முகக்கவசம் அணிந்து வெளியே செல்ல வேண்டிய நிலை இல்லை என்றும் விளக்கம்.
கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் வந்த எகிப்து கப்பலில் 17 தமிழர்கள் தவிப்பு. கேரளாவில் 5 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியானது.
கொரோனா அச்சத்தால் முடங்கியது இத்தாலி. கண்காணிப்பு வளையத்தில் இருந்து தப்பினால் மூன்று மாத சிறை.
மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர்கள் இன்று அறிவிக்கப்படலாம் எனத் தகவல். தி.மு.க. வேட்பாளர்கள் பேரவை செயலரிடம் மனு தாக்கல் செய்கின்றனர்.
மகளிர் இருபது ஓவர் உலக்கோப்பை கிரிக்கெட்டில் ஐந்தாவது முறையாக பட்டம் வென்றது ஆஸ்திரேலியா. இந்திய அணிக்கு எதிரான இறுதிப்போட்டியில் 85 ரன்கள் வித்தியாசத்தில் எளிதில் வெற்றி.