வேட்புமனுத் தாக்கல் இன்றுடன் நிறைவடைகிறது!

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மக்களவை தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்றுடன் நிறைவடைய உள்ளது.
வேட்புமனுத் தாக்கல்
வேட்புமனுத் தாக்கல்முகநூல்

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மக்களவை தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்றுடன் நிறைவடைய உள்ளது. தற்போதுவரை 737 பேர் வேட்புமனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.

18-வது மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. முதற்கட்ட வாக்குப்பதிவு நாளான ஏப்ரல் 19ஆம் தேதி அன்று, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரிக்கு தேர்தல் நடைபெற உள்ளது.

முதற்கட்ட வாக்குப்பதிவிற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 20-ஆம் தேதி தொடங்கியது. இதனையொட்டி, வேட்பாளர்களை இறுதிசெய்து வேட்புமனுக்களை தாக்கல் செய்யும் பணியில் அரசியல் கட்சிகள் தீவிரம் காட்டின. ஒரு வாரமாக வேட்புமனுத் தாக்கல் நடைபெற்றுவரும் நிலையில், இதுவரை 737 பேர் தங்களது வேட்புமனுக்களை தாக்கல் செய்துள்ளனர். அதிகபட்சமாக வேலூர் மக்களவை தொகுதியில் 31 பேர் வேட்புமனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.

வேட்புமனுத் தாக்கல்
நாளையுடன் முடிவடையும் வேட்புமனுத்தாக்கல்; பம்பரத்திற்கு போராடும் மதிமுக! தேர்தல் அதிகாரி வைத்த செக்!

இந்நிலையில், இன்றுடன் வேட்புமனு தாக்கல் நிறைவடைய உள்ளது. திமுகவை சேர்ந்த தயாநிதி மாறன், ஜெகத்ரட்சகன், ஆ.ராசா, காங்கிரஸ் வேட்பாளர் சசிகாந்த் செந்தில் உள்ளிட்டோர் இன்று வேட்புமனு தாக்கல் செய்யவுள்ளனர்.

இதேபோல், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, பாமகவின் கே.பாலு ஆகியோரும் தங்களது வேட்புமனுக்களை இன்று தாக்கல் செய்யவுள்ளனர். வேட்புமனுக்கள் நாளை பரிசீலனை செய்யப்படுகிறது. வேட்பு மனுக்களை திரும்பப்பெற வருகிற 30ஆம் தேதி கடைசி நாளாகும்.

வேட்புமனுத் தாக்கல்
ஓபிஎஸ் முதல் செல்வகணபதி வரை.. வேட்புமனு தாக்கல் செய்த முக்கிய பிரபலங்கள்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com