நாளையுடன் முடிவடையும் வேட்புமனுத்தாக்கல்; பம்பரத்திற்கு போராடும் மதிமுக! தேர்தல் அதிகாரி வைத்த செக்!

நாளையுடன் வேட்புமனுத்தாக்கல் முடிவடையும் நிலையில், பம்பரத்திற்கு மதிமுக போராடி வருகிறது.
பம்பரம் - மதிமுக
பம்பரம் - மதிமுகமுகநூல்

தமிழ்நாட்டில் நாளையுடன் வேட்பு மனுத்தாக்கல் முடிவடைகிறது. இந்த நிலையில் இன்னும் சின்னத்துக்காக போராடிக் கொண்டிருக்கின்றன கட்சிகள். மதிமுகவுக்கு பம்பரம் சின்னம் ஒதுக்க கோரிய விண்ணப்பத்தின் மீது நாளை காலை 9 மணிக்குள் முடிவெடுக்க தேர்தல் ஆணையத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

துரை வைகோ வேட்பு மனு தாக்கல்
துரை வைகோ வேட்பு மனு தாக்கல்pt desk

மக்களவைத் தேர்தலில் மதிமுகவுக்கு பம்பரம் சின்னம் ஒதுக்கக் கோரி கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு, தலைமை நீதிபதி கங்கப்பூர்வாலா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது பம்பரம் சின்னம் பொது சின்னப் பட்டியலில் உள்ளதா இல்லையா என்பது குறித்து பிற்பகல் 2:15 மணிக்கு விளக்கம் அளிக்கும்படி தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்டிருந்தனர்.

வழக்கு மீண்டும் பிற்பகல் விசாரணைக்கு வந்த போது, பம்பரம் சின்னம் பொதுசின்னமாகவோ, ஒதுக்கீட்டு சின்னமாகவோ வகைப்படுத்தப்படவில்லை எனவும், மதிமுக அளித்த விண்ணப்பத்தின் மீது நாளை ((புதன்கிழமை)) காலைக்குள் முடிவெடுக்கப்படும் எனவும் தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

#JUSTIN | முதல்வரின் உரை புறக்கணிப்பு - வைகோ கண்டனம்
#JUSTIN | முதல்வரின் உரை புறக்கணிப்பு - வைகோ கண்டனம்

தேர்தல் ஆணையம் முடிவெடுத்து அறிவிப்பதற்கு ஏற்ப வழக்கை நாளைக்கு ((புதன்கிழமைக்கு)) தள்ளிவைக்க வேண்டும் என்று மதிமுக தரப்பில் கோரப்பட்டது. இதையடுத்து, திருச்சி தொகுதியில் போட்டியிடும் மதிமுகவுக்கு பம்பரம் சின்னம் கேட்டு அளிக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தின் மீது நாளை ((புதன்கிழமை ))காலை 9 மணிக்குள் முடிவெடுக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை நாளை பிற்பகல் 2.15 மணிக்கு தள்ளிவைத்தனர்.

முன்னதாக, மதிமுகவின் மனு குறித்து பதில் அளித்த தேர்தல் ஆணையம் தரப்பு வழக்கறிஞர், “சட்டப்படி அங்கீகரிக்கப்படாத பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சி இரண்டு தொகுதிகளுக்கு மேல் போட்டியிடும் பட்சத்தில் ஒரே சின்னம் ஒதுக்கப்படும் என்றும் மதிமுகவின் கோரிக்கை மீது இன்று முடிவெடுக்கப்படும்” என்று தெரிவித்தார். ஆனால், மதிமுகவுக்கு திமுக கூட்டணியில் திருச்சி தொகுதி மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com