ஓபிஎஸ் முதல் செல்வகணபதி வரை.. வேட்புமனு தாக்கல் செய்த முக்கிய பிரபலங்கள்!

39 மக்களவை தொகுதிகளை கொண்ட தமிழ்நாட்டில், முன்னணி கட்சிகள் தங்களின் வேட்பு மனுக்களை தாக்கல் செய்ய துவங்கிவிட்டன.
 OPS
OPSமுகநூல்

18 ஆவது மக்களவை தேர்தலுக்கான தேர்தல் பணிகள் தீவிரமடைந்துள்ளன. ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழ்நாடு, புதுச்சேரி உள்ளிட்ட இடங்களில் ஒரே கட்டமாக நடைபெற இருக்கும் மக்களவை தேர்தலுக்கான வேட்பு மனுதாக்கல் மார்ச் 20 ஆம் தேதி தொடங்கியது. வேட்பு மனுக்களை தாக்கல் செய்ய கடைசி நாள் மார்ச் 27 எனக் கூறப்பட்டுள்ளது. வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை 28 ஆம் தேதியும், அதனை திரும்பபெற 30 ஆம் தேதியும் கடைசி நாளாகும்.

இதையடுத்து 39 மக்களவை தொகுதிகளை கொண்ட தமிழ்நாட்டில் முன்னணி கட்சிகள் தங்களின் கூட்டணி, தொகுதி பங்கீடு, வேட்பாளர்கள் ஆகியவற்றை கிட்டத்தட்ட நிறைவு செய்துவிட்டனர்.

இதையடுத்து தமிழகத்தில் பல்வேறு தொகுதிகளில் முன்னணி கட்சிகளின் வேட்பாளர்கள் இன்று வேட்பு மனு தாக்கல் செய்கின்றனர். இந்நிலையில், காலை 11 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை மட்டுமே வேட்பு மனு தாக்கல் செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

ஓ.பன்னீர் செல்வம்

ராமநாதபுரம் தொகுதியில் பாஜக ஆதரவுடன் சுயேச்சையாக ஓ.பன்னீர் செல்வம் வேட்பு மனு தாக்கல் செய்தார். அங்கு வந்த அவர், ராமநாதபுரம் எல்லையில் உள்ள விநாயகர் கோயிலில் வேட்பு மனு படிவத்தை வைத்து தரிசனம் செய்தார். இதன்பின்னர், அங்கேயே வைத்து வேட்புமனு படிவத்தில் கையெழுத்திட்டார்.இதனையடுத்து, அங்கிருந்த தேர்தல் அலுவலர் பிரதீப் குமாரிடம் ஓபிஎஸ் வேட்புமனு தாக்கல் செய்தார்.

 OPS
மக்களவை தேர்தல் 2024 | கங்கணா ரணாவத் To அருண் கோவில்.. பாஜக அறிவித்த நட்சத்திர வேட்பாளர்கள் பட்டியல்

வேலூரில் திமுகவின் கதிர் ஆனந்த் வேட்பு மனு தாக்கல் செய்தார். அப்போது அமைச்சர் துரைமுருகன் உடனிருந்தார். மதுரையில் சு.வெங்கடேசன், அதிமுகவின் சரவணன், பாஜகவின் ராம் ஸ்ரீனிவாசன் ஆகியோர் வேட்புமனு தாக்கல் செய்தனர். சேலத்தில் திமுகவின் டி.எம்.செல்வகணபதி, அதிமுகவின் விக்னேஷ் வேட்பு மனு தாக்கல்.

வேட்புமனு தாக்கல் செய்துள்ள நட்சத்திர வேட்பாளர்கள்

தென் சென்னையில் அதிமுகவின் ஜெயவர்தன், திமுகவின் தமிழச்சி தங்கப்பாண்டியன், தென் சென்னையில் தமிழிசை, மத்திய சென்னையில் வினோஜ், நெல்லையில் பாஜகவின் நயினார் நாகேந்திரன்,வேலூரில் திமுகவின் கதிர் ஆனந்த் ,பெரம்பலூர் தொகுதியில் ஐஜேகே தலைவரும் வேட்பாளருமான பாரிவேந்தர், திருச்சியில் மதிமுகவின் துரை வைகோ, விருதுநகரில் தேமுதிகவின் விஜய பிரபாகர் ஆகியோர் வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com