\
TN TVK cabinet expansion congress announces as two ministers
CM Vijayx page

59 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழக அமைச்சரவையில் காங்கிரஸ்.. விரிவாக்கம் செய்யப்படும் தவெக ஆட்சி!

காங்கிரஸ் கட்சிக்கு அமைச்சரவையில் இரண்டு இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.
Published on

நாளை (21ஆம் தேதி) தமிழ்நாடு அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட இருக்கிறது. இதற்கான அதிகாரப்பூர்வ அழைப்பிதழ் வெளியிடப்பட்டுள்ளது. அமைச்சரவை விரிவாக்கத்திற்காக, ஆதரவு தெரிவித்த கட்சிகளுக்கு தவெக அரசு அழைப்பும் விடுத்தது.

தமிழக சட்டபேரவைத் தேர்தலில் தவெக 108 இடங்களைப் பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவானபோதும் ஆட்சிமையக்க போதிய பெரும்பான்மை கிடைக்காத நிலையில், காங்கிரஸ், விசிக, இடதுசாரிகள் மற்றும் ஐயூஎம்எல் ஆதரவுடன் ஆட்சியமைத்திருக்கிறது. அக்கட்சியின் தலைவர் விஜய் மே 10-ஆம் தேதி தமிழகத்தின் முதல்வராக பொறுப்பேற்றார். அவருடன் 9 அமைச்சர்களும் பதவியேற்றனர். அவர்களுக்கு இலாகாவும் ஒதுக்கப்பட்டது.

விஜய்
விஜய்Pt web

எனினும், மேற்கொண்டு அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்படாமலேயே இருந்துவந்தது. இந்த நிலையில், நாளை (21ஆம் தேதி) தமிழ்நாடு அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட இருக்கிறது. இதற்கான அதிகாரப்பூர்வ அழைப்பிதழ் வெளியிடப்பட்டுள்ளது. அமைச்சரவை விரிவாக்கத்திற்காக, ஆதரவு தெரிவித்த கட்சிகளுக்கு தவெக அரசு அழைப்பும் விடுத்தது.

TN TVK cabinet expansion congress announces as two ministers
”அமைச்சரவையில் அதிமுகவுக்கு இடமில்லை; தவெக தரப்பு தகவல்” - திருமாவளவன்!

அதன்படி, காங்கிரஸ் கட்சிக்கு அமைச்சரவையில் இரண்டு இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்களான வழக்கறிஞர் ராஜேஷ் குமார் மற்றும் பி. விஸ்வநாதன் ஆகியோர் அந்த அமைச்சரவையில் இடம்பெறுவர் என கட்சியிலும் ஒப்புதல் அளித்துள்ளது. இதன்மூலம் 59 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழக அமைச்சரவையில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்களுக்கு இடம் கொடுக்கப்பட்டுள்ளது.

rahul, vijay
rahul, vijayx page

இதுதொடர்பாக தேசிய பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் வெளியிட்டுள்ள பதிவில், "அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, காங்கிரஸ் கட்சியின் சட்டப்பேரவை உறுப்பினர்களான வழக்கறிஞர் ராஜேஷ் குமார் மற்றும் பி. விஸ்வநாதன் ஆகியோரைத் தமிழ்நாடு அமைச்சரவையில் சேர்ப்பதற்கு ஒப்புதல் அளித்துள்ளார். இருவரும் நாளை அமைச்சர்களாகப் பதவியேற்க உள்ளனர். சுமார் 59 ஆண்டுகால நீண்ட இடைவெளிக்குப் பிறகு காங்கிரஸ் கட்சி மீண்டும் தமிழ்நாடு அமைச்சரவையில் இணைவதால், இது ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க தருணமாகும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

TN TVK cabinet expansion congress announces as two ministers
திண்டுக்கல் | நள்ளிரவில் அதிரடி காட்டிய தவெக எம்எல்ஏ!
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com