டிஜிட்டல் ரேஸில் முன்னேறும் முதல்வர் அலுவலகங்கள்.. டாப் 5 பட்டியலில் இடம்பிடித்த விஜய்!
சமூக வலைதளப் பக்கங்களைப் பின்தொடர்வோரின் எண்ணிக்கை அடிப்படையில், 2.52 கோடி பின்தொடர்வோருடன் உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் முதலிடத்தில் நீடிக்கிறார்.
தமிழகத்தின் 9-ஆவது முதல்வராக விஜய் பதவியேற்ற 24 மணி நேரத்திற்குள், தமிழக முதல்வர் அலுவலகத்தின் அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கம் 20 லட்சம் பின்தொடர்பாளர்களைக் கடந்து உலகளவில் கவனம் பெற்றுள்ளது. சமூக வலைதளப் பக்கங்களைப் பின்தொடர்வோரின் எண்ணிக்கை அடிப்படையில், 2.52 கோடி பின்தொடர்வோருடன் உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் முதலிடத்தில் நீடிக்கிறார்.
ராஜஸ்தான் முதல்வர் பஜன்லால் ஷர்மா மற்றும் மஹாராஷ்ட்ரா முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் ஆகியோர் அடுத்தடுத்த இடங்களைப் பிடித்துள்ளனர். இதில் ஆச்சரியமான மாற்றமாக, தமிழக முதல்வர் விஜய் 45.12 லட்சம் பின்தொடர்வோருடன் நான்காவது இடத்தைப் பிடித்துள்ளார். ஒடிசா முதல்வர் மோகன் சரண் மாஜி (35.92லட்சம்) ஐந்தாவது இடத்தில் உள்ளார். தேசிய அரசியலில் பாஜக முதல்வர்கள் ஆதிக்கம் செலுத்தும் வேளையில், தமிழக முதல்வர் அலுவலகம் டிஜிட்டல் தளத்தில் மின்னல் வேகத்தில் பார்வையாளர்கள் எண்ணிக்கை கூடிக்கொண்டேயிருக்கிறது.

