அண்ணாமலை வேட்புமனுவிற்கு எதிர்ப்பு எழுந்ததுஏன்? வேட்புமனு ஏற்புக்கு தேர்தல்அதிகாரி கொடுத்த விளக்கம்!

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் வேட்பு மனு ஏற்றுக்கொள்ளப்பட்டதாக தேர்தல் அலுவலர் தெரிவித்துள்ளார்.
அண்ணாமலை
அண்ணாமலைட்விட்டர்

ஜனநாயகப் பெருவிழா, நாட்டில் ஜாதி பேதமின்றிக் களைகட்டத் தொடங்கியிருக்கிறது. 7 கட்டங்களாக நடைபெற இருக்கும் 18வது மக்களவைத் தேர்தல், தமிழகத்தில் ஏப்ரல் 19ஆம் தேதி ஒரேகட்டமாக நடைபெற உள்ளது. மொத்தமுள்ள 39 தொகுதிகளிலும் நான்கு முனைப் போட்டி நிலவுகிறது. இதற்காக, கடந்த மார்ச் 20ஆம் தேதி தொடங்கிய வேட்பு மனுத் தாக்கல் நேற்றுடன் (மார்ச் 27) நிறைவடைந்ததைத் தொடர்ந்து இன்று (மார்ச் 28) மனுக்கள் மீது பரிசீலனை செய்யப்பட்டன. முன்னதாக, மொத்தம் 1,403 பேர், 1,749 வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர்.

இதில் பாஜக சார்பில் மாநிலத் தலைவர் அண்ணாமலை கோயம்புத்தூர் மக்களவைத் தொகுதியில் போட்டியிடுகிறார். இதற்காக, அவர் வேட்பு மனுத்தாக்கல் செய்திருந்தார். இன்று, வேட்பு மனுக்கள் பரிசீலனையின்போது அண்ணாமலையின் வேட்புமனு ஏற்புக்கு தி.மு.க, அ.தி.மு.க, நாம் தமிழர் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.

இதையும் படிக்க: அறிவித்த 1 மணி நேரத்தில் உத்தவ் அணி வேட்பாளருக்கு 3 வருட பழைய ஊழல் வழக்கில் நோட்டீஸ்; ஆக்‌ஷனில் ED!

அண்ணாமலை
கோவை | “நான் நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டால்...” - வாக்குறுதிகள் அளித்த அண்ணாமலை

இதுகுறித்த புகாரில், ’வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்யும் போது பத்திரப் பதிவுக்கான முத்திரைத் தாளில்தான் வேட்பு மனுத் தாக்கல் செய்ய வேண்டும்; ஆனால் தேர்தல் ஆணையம் அனுமதிக்காத நீதிமன்ற முத்திரைத்தாளைப் பயன்படுத்தி அண்ணாமலை வேட்பு மனுத் தாக்கல் செய்திருக்கிறார். இது, அப்பட்டமான விதிமீறல். இதனால் அண்ணாமலையின் வேட்பு மனுவை ஏற்கக் கூடாது’ என அவரது வேட்பு மனுவை செல்லாது என அறிவிக்கக் கோரி கடும் எதிர்ப்பு தெரிவித்தன.

ஆனால் இந்த எதிர்ப்பை மீறி அண்ணாமலையின் வேட்புமனு ஏற்கப்பட்டதாக மாவட்ட தேர்தல் அலுவலர் காந்தி குமார் பாடி அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர், ”கோவை மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் அண்ணாமலை 2 வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்துள்ளார். நம்பர் 17 மற்றும் நம்பர் 27 என இரண்டு வேட்பு மனுக்கள் தாக்கல் செய்திருந்தார். இதில் நம்பர் 17 வேட்பு மனுவில் court fee பத்திரம் மற்றும் கையெழுத்து இல்லாமல் இருந்ததால் அந்த வேட்பு மனு நிராகரிக்கப்பட்டது. நம்பர் 27 non ஜுடிசியல் பத்திரமாக வேட்பு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதால் அது அங்கீகரிக்கப்பட்டது” எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க: ED அனுப்பிய சம்மனை நிராகரித்த மஹுவா மொய்தரா.. ‘என்ன நடக்கும் தெரியுமா?’.. மிரட்டும் பாஜக!

அண்ணாமலை
மக்களவை தேர்தல் 2024 | 9 வேட்பாளர்கள் அறிவிப்பு.. களத்தில் இறங்கிய அண்ணாமலை, எல்.முருகன்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com