அறிவித்த 1 மணி நேரத்தில் உத்தவ் அணி வேட்பாளருக்கு 3 வருட பழைய ஊழல் வழக்கில் நோட்டீஸ்; ஆக்‌ஷனில் ED!

மகாராஷ்டிராவில் உத்தவ் அணி தரப்பில் அறிவிக்கப்பட்ட வேட்பாளர் ஒருவருக்கு அமலாக்கத் துறை ஊழல் வழக்கில் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
அமோல் கிர்த்திகர்
அமோல் கிர்த்திகர்ட்விட்டர்

மராட்டியத்தில் எட்டப்படாத சுமுகப் பேச்சுவார்த்தை

மக்களவைத் தேர்தலுக்கான பணிகளில் அனைத்துக் கட்சிகளும் தீவிரம் காட்டி வருகின்றன. அந்த வகையில், மகாராஷ்டிராவில் மொத்தமுள்ள 48 மக்களவைத் தொகுதிகளுக்கு 5 கட்டங்களாகத் தேர்தல் நடைபெற உள்ளது. முதல்கட்டமாக 5 தொகுதிகளுக்கு ஏப்ரல் 19ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இந்த நிலையில், மகாராஷ்டிராவில் பாஜக துணையுடன் சிவசேனாவில் இருந்து பிரிந்த ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அரசு செயல்பட்டு வருகிறது. இந்த அரசில் கடந்த ஆண்டு தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் சரத் பவாரின் அண்ணன் மகனுமான அஜித் பவார் இணைந்து அம்மாநில துணை முதல்வராகப் பதவியில் உள்ளார். இதனால் அம்மாநிலத்தில் சிவசேனாவும், தேசியவாத காங்கிரஸும் இரண்டாக உடைந்தன. எனினும், பாஜக கூட்டணியில் அங்கம் வகிக்கும் இந்தக் கட்சிகளுக்கும் இதுவரை எந்த சமரசமும் ஏற்படவில்லை. இதனால் தொகுதிகளை அறிவிப்பதில் சிக்கல் நீள்கிறது.

ஏக்நாத் ஷிண்டே, உத்தவ் தாக்கரே, சரத் ப்வார்
ஏக்நாத் ஷிண்டே, உத்தவ் தாக்கரே, சரத் ப்வார்ட்விட்டர்

அதேபோல், உடைந்திருக்கும் உத்தவ் தாக்கரே சிவசேனாவும், சரத்பவாரின் கட்சியும் காங்கிரஸும் I-N-D-I-A கூட்டணியில் அங்கம் வகித்தாலும் இன்னும் தொகுதிப் பங்கீட்டுப் பிரச்னை முடிவுக்கு வரவில்லை. இதையடுத்து, உத்தவ் தாக்கரே கட்சி, திடீரென 16 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்திருப்பது பரபரப்பைக் கூட்டணிக் கட்சிகளிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிக்க: மாண்டியாவில் களமிறக்கப்பட்ட குமாரசாமி; பாஜக கைவிட்டதால் கடும் அதிருப்தியில் சுயேட்சை எம்.பி சுமலதா!

அமோல் கிர்த்திகர்
உத்தவ் தாக்கரேவா - ஏக்நாத் ஷிண்டேவா? யார் உண்மையான சிவசேனா? தேர்தல் ஆணையம் இன்று முடிவு

உத்தவ் அணியிலிருந்து விலகிய அம்பேத்கர் பேரன்

முன்னதாக, இக்கூட்டணியில் இருந்து மறைந்த சட்டமேதை அம்பேத்கரின் பேரனும் வஞ்சித் பகுஜன் அகாடியின் தலைவருமான பிரகாஷ் யஷ்வந்த் அம்பேத்கர் விலகியதுடன், மராத்தா இடஒதுக்கீட்டுக்காகத் தொடர்ந்து குரல் கொடுத்துவரும் அவ்வமைப்பின் தலைவர் மனோஜ் ஜராங்கேவுடன் கூட்டணி வைத்து 8 இடங்களுக்கு வேட்பாளர்களையும் அறிவித்துள்ளார். இது ஒருபுறமிருக்க மறுபுறம் உத்தவ் தாக்கரே கட்சியிலிருந்து 16 பேர் கொண்ட முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், மும்பை வடமேற்குத் தொகுதியில் அமோல் கிர்த்திகர் என்பவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இவர், மூத்த சிவசேனா தலைவர் கஜானன் கிர்த்திகரின் மகன் ஆவார். மேலும், மறைந்த சிவசேனா தலைவர் பாலாசாஹேப் தாக்கரேவின் மீதான பற்றால் அரசியல் வாழ்வைத் தொடங்கி, சாதாரண மக்களின் உரிமைகளுக்காகக் குரல் கொடுத்தவராக அறியப்படுகிறார்.

வேட்பாளர் பட்டியல் வெளியீடு: காங்கிரஸ் எதிர்ப்பு!

இந்த நிலையில், இவரது பெயர் அறிவிக்கப்பட்டதற்குப் பின்னால் எதிர்ப்பும் கிளம்பியது. குறிப்பாக உத்தவ் தாக்கரே கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ் கடுமையான ஆட்சேபம் தெரிவித்துள்ளது. காங்கிரஸின் மூத்த தலைவரும் முன்னாள் எம்பியுமான சஞ்சய் நிருபம் அதிருப்தி அடைந்துள்ளார். இதுகுறித்து அவர், ”இந்த விவகாரத்தில் காங்கிரஸ் தலைமை முடிவு எடுக்கும் வரை நான் ஒரு வாரம் காத்திருப்பேன். அதன்பிறகு அடுத்தகட்ட நடவடிக்கைக்கு நான் தயாராக இருக்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார். அதாவது, இந்த தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடுவதற்கு விருப்பம் தெரிவித்திருந்தார். இந்த நிலையில், கஜானனின் பெயர் உத்தவ் தாக்கரே அணியினரால் அறிவிக்கப்பட்டிருப்பதால் பிரச்னை வெடித்திருக்கிறது. கூட்டணிக்குள் இந்தப் பிரச்னை என்றால், மத்திய அரசோ அடுத்த கதையை எடுத்துள்ளது. பெயர் அறிவிக்கப்பட்ட ஒரு மணி நேரத்திலேயே, அமலாக்கத் துறை ஊழல் வழக்கில் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

இதையும் படிக்க: ”தேர்தல் பத்திரம் மிகப்பெரிய ஊழல்; இது பூதாகரமாக உருவெடுக்கும்” - நிர்மலா சீதாராமனின் கணவர் கருத்து!

அமோல் கிர்த்திகர்
பாஜக அரசியலுக்காக அமலாக்கத் துறையை பயன்படுத்துகிறதா? - மத்தியமைச்சர் கிஷன் ரெட்டி கொடுத்த பதில்

கொரோனா காலம்: கிச்சடி விநியோகத்தில் மெகா ஊழல்!

மும்பையில் கொரோனா காலத்தில் பாதிக்கப்பட்ட வெளிமாநிலத் தொழிலாளர்கள் மற்றும் மக்களுக்கு மும்பை மாநகராட்சி சார்பாக நேரடியாக கிச்சடி உணவு விநியோகம் செய்யப்பட்டது. நகரின் முக்கியமான இடங்களுக்கு வாகனங்களில் கிச்சடி எடுத்துச் செல்லப்பட்டு விநியோகம் செய்யப்பட்டது. இதுதவிர கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர்களுக்கும் கிச்சடி கொடுக்கப்பட்டது. இந்த கிச்சடியைத் தயாரித்து விநியோகம் செய்ததில் ஊழல் நடந்திருப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. கிட்டத்தட்ட இதில் 4 ஆயிரம் கோடி அளவுக்கு ஊழல் நடைபெற்றிருப்பதாகக் கூறப்படுகிறது. அதன்பேரில், மும்பை காவல்துறையின் பொருளாதார குற்றப்பிரிவு (EOW) வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியது. தற்போது இந்த வழக்கை அமலாக்கத் துறை கையில் எடுத்துள்ளது. அதன்பேரிலேயே அவருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளது.

2022-ஆம் ஆண்டு சிவசேனா இரண்டாக உடைந்ததிலிருந்து அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் உத்தவ் தாக்கரே அணியில் இடம்பெற்றிருக்கும் தலைவர்களுக்கு எதிராக அடுத்தடுத்து நடவடிக்கை எடுத்துவருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: ”நேர்மையான விசாரணை வேண்டும்” நேற்று ஜெர்மனி.. இன்று அமெரிக்கா; கெஜ்ரிவால் கைதில் உலகநாடுகள் கருத்து!

அமோல் கிர்த்திகர்
”நரேந்திர மோடியின் ஊழல் கொள்கையின் மற்றுமொரு ஆதாரம்” - தேர்தல் பத்திரம் தீர்ப்பு; தலைவர்கள் வரவேற்பு

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com