கோவை | “நான் நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டால்...” - வாக்குறுதிகள் அளித்த அண்ணாமலை

“நாடாளுமன்ற உறுப்பினராக நான் தேர்ந்தெடுக்கப்பட்டால் அடுத்த 45 நாட்களுக்குள் கோவையில் போதைப்பொருள் தடுப்பு அலுவலகத்தை கொண்டு வருவேன்” என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.
Annamalai
Annamalaipt web

செய்தியாளர்: ஐஷ்வர்யா

கோவை சிங்காநல்லூர் பகுதியில் பாஜக செயல்வீரர்கள் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் பங்கேற்று பேசிய பாஜக மாநிலத் தலைவரும் கோவை நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளருமான அண்ணாமலை,

‘1952 மற்றும் 2024 தேர்தல்களுக்கு ஓர் ஒற்றுமை...’

“1952 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலுக்கும் தற்போது நடைபெறும் தேர்தலுக்கும் ஒரு ஒற்றுமை உள்ளது. அன்று காங்கிரஸ் கட்சி மட்டும்தான் ஆட்சிக்கு வரும் என்ற நிலை இருந்தது. அதேபோல் இன்று அனைவருக்கும் தெரியும்... மோடிதான் பிரதமராவார் என்று!

2004 மற்றும் 2009 ஆம் ஆண்டு தேர்தல்களில் மன்மோகன் சிங்தான் பிரதமராக வருவார் என்று தெரியாமல்தான் நாம் ஓட்டுப் போட்டோம். ஆனால் 2014 ஆம் ஆண்டு மோடிதான் பிரதமர் ஆவார் என்ற நம்பிக்கையில் ஓட்டுப் போட்டோம்.

Annamalai
"பிரதமர் மோடியை பற்றி பேச முதல்வருக்கு தகுதி இல்லை" – அண்ணாமலை

‘இன்றைய பிரதமரை யாராலும் மிரட்டி பணிய வைக்க முடியாது’

மம்தா, திமுக போன்றோர் நாட்டை வெட்டிக் கூறுபோட்டு விட்டனர். 2ஜி அலைக்கற்றை கொள்கையை மாற்றிய ஆ.ராசா பிரதமரை எதிர்த்து திட்டம் போட்டார். எல்லா கட்சியினரும் வாய் பேச முடியாத பிரதமரை கொடுங்கள் என்பதில்தான் ஒற்றுமையாக இருந்தார்கள். இன்று பிரதமர் மோடியை யாராலும் மிரட்டி பணிய வைக்க முடியாது.

அந்த ஆண்டவனே இறங்கி வந்தால்தான் அவரை மிரட்டி பணிய வைக்க முடியும். அதற்கு கூட அவர் பணிவாரா என்பது தெரியவில்லை. 1980ல் அரைத்த மாவையே தற்போது இந்த தேர்தலிலும் திமுகவினர் அரைத்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த தேர்தலை போல் இன்னொரு தேர்தல் வருமா என சொல்ல முடியாது. ஆனால், மோடியை போல் இன்னொது தலைவரை பார்க்க முடியாது.

Annamalai
டெல்லி அரசியலில் எனக்கு விருப்பமில்லை: ஆனால்..? : அண்ணாமலை

‘கோவையில் என்.டி.ஏ கொண்டுவருவேன்..’

நான் வெற்றி பெற்று நாடாளுமன்ற உறுப்பினராகும் பட்சத்தில் எண்ணி 45 நாட்களில் தேசிய போதைப்பொருள் தடுப்பு அலுவலகத்தை கோவைக்கு கொண்டு வருவேன். கடுமையான சட்டங்கள் இருந்தும் முறையான நடைமுறை இல்லாததால் போதை கலாசாரம் தமிழகத்தில் இருக்கிறது. நான் கோவை நாடாளுமன்ற உறுப்பினரானால், உடனடியாக கோவையில் என்ஐஏ அலுவலகம் கொண்டு வரப்படும்.

‘ஒரு வாரத்தில் புத்தகம் வெளியிடுவோம்...’

தீவிரவாதத்திற்கு மதம் கிடையாது. கோவை சிலிண்டர் வெடிப்புக்கு முதல் எதிர்ப்பை தெரிவித்தது இங்குள்ள ஜமாத்தான். கோவை நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட சட்டமன்ற தொகுதி வாரியாக என்ன செய்வோம் என்பது தொடர்பான புத்தகம் ஒரு வாரத்திற்குள் வெளியிடப்படும்” என்று தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com