விஜய், திருமாவளவன்
விஜய், திருமாவளவன்pt web

”அரசியல் சாயம் பூசப்படும்.. குழப்பத்தை உண்டாக்கும்” திருமாவளவன் புதிய தலைமுறைக்கு பிரத்யேக பேட்டி

அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழாவில் விஜயுடன் பங்கேற்றால் அரசியல் சாயம் பூசுவார்கள் என விசிக தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
Published on

சென்னையில் இன்று நடைபெற உள்ள அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழாவில் தவெக தலைவரும் நடிகருமான விஜய் பங்கேற்கிறார். விகடன் பிரசுரம் மற்றும் விசிக துணை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜூனாவின் நிறுவனமும் இணைந்து ‘எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்’ என்ற நூலை தயாரித்துள்ளனர். இந்த நூலுக்கு ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு, இந்து என்.ராம், விசிக தலைவர் திருமாவளவன், ஆதன் அர்ஜுனா உட்பட 36பேர் பங்காற்றியுள்ளனர்.

'எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்' என்னும் நூலை வெளியிடுகிறார் தவெக தலைவர் விஜய்
'எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்' என்னும் நூலை வெளியிடுகிறார் தவெக தலைவர் விஜய்

இன்று நடைபெறும் விழாவில் விஜய் பங்கேற்று, அம்பேத்கர் நூலை வெளியிடுகிறார். ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு முதல் பிரதியை பெற்றுக்கொள்கிறார். இந்த நிகழ்ச்சியில் முதலில் திருமாவளவன் பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியான நிலையில் பின்னர் அவர் பங்கேற்கவில்லை என தெரிவிக்கப்பட்டது. விஜய்யுடன் ஒரே மேடையை பகிந்து கொண்டால் தேவையற்ற அரசியல் யூகங்களுக்கு வழி வகுக்கும் என்பதால் திருமாவளவன் இந்த விழாவை புறக்கணித்துவிட்டதாக கூறப்படுகிறது.

விஜய், திருமாவளவன்
திருப்பத்தூர்: தண்டவாளத்தை கடக்க முயன்ற பெண் சிறப்பு உதவி ஆய்வாளருக்கு நேர்ந்த பரிதாபம்

இந்நிலையில், அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் திருமாவளவன் புதிய தலைமுறை தொலைக்காட்சிக்கு பிரத்யேக பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர், “விகடன் பதிப்பகத்தின் சார்பில் ‘எல்லோருக்குமான தலைவர்’ எனும் நூல் சென்னையில் இன்று வெளியிடப்படுகிறது. தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் வெளியிடுகிறார். விழா வெற்றிகரமாக அமைய என் வாழ்த்துகள். புத்தகம் உருவாக்கத்தின்போதே ஆதவ் அர்ஜுனா மூலமாக எனக்குத் தகவல் வந்தது. நானும் அதில் பங்கேற்பதாக இருந்தது. தவிர்க்க முடியாத காரணங்களால் அது தள்ளிப்போனது. முதலமைச்சரும் பங்கேற்பதாகத்தான் சொல்லப்பட்டது.

விக்கிரவாண்டியில் விஜய் பேசியது அரசியல் தாக்கத்தையும் சலசலப்பையும் ஏற்படுத்தியது. தமிழ் நாளேடு ஒன்று அதை பூதாகரமாக்கி அந்த நிகழ்வுக்கே ஒரு அரசியல் சாயத்தைப் பூசியது. அதனால்தான் நூல் வெளியீட்டு விழாவில் ஒரு சிக்கல் உருவானது. நூல் வெளியீட்டு விழாவாக மட்டுமே நடந்திருக்க வேண்டிய நிகழ்வை அரசியல் சாயம் பூசி சர்ச்சைக்கு உள்ளாக்கியது அந்த நாளேடு.

விஜய், திருமாவளவன்
சொந்த இடத்தை தானமாகக் கொடுத்தும் சாலை அமைத்துத்தராத நிர்வாகம் - மாணவர்கள் அவதி

விசிக திமுக கூட்டணியில் பங்கேற்று ஆறேழு ஆண்டுகளாக பயணித்து வரும் சூழலில், நானும் அந்த நிகழ்வில் பங்கேற்றால் அதற்கும் அரசியல் சாயம் பூசப்படும், தேவையில்லாத குழப்பத்தை உருவாக்கும். குழப்பத்தை உருவாக்குவதற்கென்றே இருக்கும் சக்திகள் முயற்சி செய்வார்கள். அப்படி ஒரு சூழல் ஏற்பட்டுவிடக்கூடாது என்ற எச்சரிக்கையோடு விஜய் மட்டுமே அதில் பங்கேற்கட்டும் என்ற முடிவை நாங்கள் எடுத்தோம். விஜய்யுடன் எங்களுக்கு எந்த முரண்பாடும் இல்லை. விஜய்க்கும் எங்களுக்கும் எந்த சிக்கலும் இல்லை.

தமிழ் நாளேடு இந்த செய்தியை பூதாகரமாக்கி தலைப்புச் செய்தியாக வெளியிட்டது. திருமாவளவனும் விஜய்யும் ஒரே மேடையில் ஏறப்போகிறார்கள் என்ற செய்தியை வெளியிட்டு அரசியல் சாயம் பூசியது” எனத் தெரிவித்துள்ளார்.

விஜய், திருமாவளவன்
தருமபுரி, மயிலாடுதுறை மாவட்டங்களில் கடும் பனிமூட்டம் - வாகன ஓட்டிகள் அவதி

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com