நயினார் நாகேந்திரன் - விஜய்
நயினார் நாகேந்திரன் - விஜய்web

“தவெக ஒரு தொகுதியிலும் வெல்ல வாய்ப்பில்லை” - நயினார் நாகேந்திரன்

விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் ஒரு தொகுதியிலும் வெல்ல வாய்ப்பில்லை, கருத்துக்கணிப்பு மீது நம்பிக்கை இல்லை என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.
Published on
Summary

பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், கருத்துக்கணிப்புகளை ‘கருத்துத் திணிப்பு’ என நிராகரித்து, மே 4ஆம் தேதியே மக்களின் உண்மையான தீர்ப்பு வெளிப்படும் எனக் கூறினார். விஜய் கட்சி எந்த தொகுதியிலும் வெற்றி பெற வாய்ப்பில்லை எனவும் அவர் வலியுறுத்தினார்.

தமிழ்நாடு அரசியல் களம் பல தசாப்தங்களுக்கு பிறகு வலுவான மும்முனை போட்டியை கண்டுள்ளதாக பல அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். தேர்தலுக்கு முன் விஜயை பார்க்க மட்டுமே கூட்டும் கூடுகிறது என்றும், அது பெரியதாக ஓட்டாக மாறாது என்றும் சொல்லப்பட்ட நிலையில் தற்போது தேர்தல் முடிவுக்கு முன்னால் வெளியான கருத்துக்கணிப்பு எல்லோரையும் கொஞ்சம் ஆட்டித்தான் பார்த்துள்ளது.

ஆக்ஸிஸ் மை இந்தியா வெளியிட்ட கருத்துக்கணிப்பின் படி விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக்கழகம் 120 இடங்கள் வரை தனிப்பெரும்பான்மையாக வெற்றிபெறும் எனக் கணித்துள்ளது. இதை ரியாலிட்டி இல்லை என்று ஒதுக்கி விடமுடியாது என்று கூறும் அரசியல் கருத்தாளர்கள், விஜய் பெரும்பான்மை பெறலாம் என்றும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

திமுக, அதிமுக, தவெக என 3 கட்சிகளும் ஆட்சி அமைக்கலாம் என்ற கருத்துக்கணிப்பு வெளியாகியிருக்கும் சூழலில், மே 4ஆம் தேதி என்ன நடக்கப்போகிறது என்ற எதிர்ப்பார்ப்பு அதிகரித்துள்ளது.

நயினார் நாகேந்திரன் - விஜய்
”தவெக-விற்கு 41% வாக்குகள்.. 121 இடங்கள்” - முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி ரவி கருத்துக்கணிப்பு!

ஒரு தொகுதியில் கூட வெல்லாது..

கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலுக்கு பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் குடும்பத்தோடு வருகை தந்து சாமி தரிசனம் செய்தார். தொடர்ந்து சமுத்திர ஆரத்தி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின்பு அவர் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், கருத்து கணிப்பு மேல் நம்பிக்கை இல்லை. கருத்து திணிப்பாக தான் உள்ளது. தற்போது கருத்து கணிப்பு பற்றி பேச வேண்டிய அவசியம் இல்லை. மே 4 ஆம் தேதி மக்களின் உண்மையான கருத்து கணிப்பு, மக்களின் உண்மையான எண்ணங்கள் கடந்த 5 ஆண்டுகளில் எவ்வளவு மோசமாக ஆட்சி நடந்தது என்பதை மே 4 ஆம் தேதி தெரிந்து கொள்ளலாம். விஜய் கட்சி எந்த தொகுதியிலும் வெற்றி பெற வாய்ப்பு இல்லை. பக்கத்து நாடுகளில் கேஸ் கிடைக்க வில்லை.

நாங்கள் வெற்றி பெற போகிறோம் அதனால் தான் அமைதியாக இருக்கிறோம். கேஸ் பிரச்சனையா இருந்தாலும், பெட்ரோல் டீசல் பிரச்சினையாக இருந்தாலும் பாஜக அரசு எப்போதும் மக்களின் நலன் கருதி முடிவுகளை எடுக்கும் என தெரிவித்தார்.

நயினார் நாகேந்திரன் - விஜய்
’திமுக அல்ல அதிமுகவுக்கு தான் வெற்றி.. ஆனால் விஜயின் வளர்ச்சி..’ Zoho நிறுவனர் கணிப்பு!
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com