தேனி: பரப்புரையில் பங்கேற்றவருக்கு அதிமுக பணப்பட்டுவாடா; வெளியான அதிர்ச்சி வீடியோ!

மதுரை அலங்காநல்லூரில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பரப்புரையில் ஈடுபட்டிருந்த போது பணப்பட்டுவாடா நடந்திருப்பதாக வீடியோ வெளியாகியுள்ளது.
அதிமுக வேட்பாளரின் பரப்புரையில் பணப்பட்டுவாடா
அதிமுக வேட்பாளரின் பரப்புரையில் பணப்பட்டுவாடாpt web

நாடாளுமன்ற தேர்தல் பரப்புரைகள் அனைத்து கட்சிகளாலும் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. நேற்றுடன், வேட்புமனுத் தாக்கல் நிறைவடைந்த நிலையில், வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை இன்று நடைபெற்று வருகிறது. ஆங்காங்கு வேட்பாளர்களின் வேட்புமனுக்கள் நிறுத்திவைக்கப்பட்டு பின் மீண்டும் ஏற்றுக்கொள்ளப்பட்டு வரும் நிகழ்வுகளும் நடக்கின்றன. தமிழ்நாடு முழுவதும் 40 தொகுதிகளிலும் பெரும்பாலான வேட்பாளர்களின் மனு ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன.

உதயநிதி ஸ்டாலின் பரப்புரையில் பணப்பட்டுவாடா
உதயநிதி ஸ்டாலின் பரப்புரையில் பணப்பட்டுவாடாpt web

1,749 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். அதிகபட்சமாக கரூர் மக்களவை தொகுதியில் 62 வேட்பாளர்கள் தங்களது வேட்புமனுக்களை தாக்கல் செய்துள்ளனர். இத்தகைய சூழலில் ஆங்காங்கு, பணப்பட்டுவாடா செய்யப்படும் சம்பவங்களும் நடைபெறுகின்றன.

அதிமுக வேட்பாளரின் பரப்புரையில் பணப்பட்டுவாடா
நாமக்கல்: வேட்பாளருக்கு ஆரத்தி எடுத்தால் ரூ50; கூட்டத்திற்கு வந்தால் ரூ.100-களைகட்டிய பணப்பட்டுவாடா!

தேனி மக்களவைத் தொகுதியில், திமுக வேட்பாளராக தங்க தமிழ்ச்செல்வனும், பாஜக கூட்டணி சார்பில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனும் போட்டியிடுகின்றனர். தேனி அதிமுக வேட்பாளராக களமிறக்கப்பட்டுள்ளவர் நாராயணசாமி. இந்நிலையில் இன்று, தேனி மக்களவைத் தொகுதியின் சோழவந்தான் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அலங்காநல்லூர் பகுதிகளில் கிராமம் கிராமமாக சென்று, தனக்கு ஆதரவாக இரட்டை இலை சின்னத்திற்கு வாக்குகளை சேகரித்து வருகிறார்.

இதற்காக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் தனது பிரச்சாரத்தை தொடங்கிய நாராயணசாமி, பல்வேறு கிராமங்களுடன் பிரச்சாரம் மேற்கொண்டார். கல்லணை பகுதியில் அதிமுக வேட்பாளர் பிரச்சாரம் செய்து கிளம்பியதும் அங்கிருந்த அதிமுக நிர்வாகி, பெண்களை வரிசையாக நிறுத்தி பணப்பட்டுவாடா செய்தார். வீடியோ எடுப்பதுகூட தெரியாமல் மிகத்தீவிரமாக பணப்பட்டுவாடா செய்தார். பிரசாரத்திற்கு ஐந்து வாகனங்கள் மட்டுமே செல்ல வேண்டும் என்ற விதிமுறைகள் உள்ள சூழலில் 10க்கும் மேற்பட்ட வாகனங்கள் சென்றது மிக முக்கியமான விஷயமாகவும் பார்க்கப்படுகிறது.

முன்னதாக, அமைச்சரும் திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் தேனி திமுக வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வனை ஆதரித்து பரப்புரை மேற்கொண்ட போது, அக்கூட்டத்தில் பங்கேற்றவர்களுக்கு பணம் கொடுக்கப்பட்டதாக வீடியோ வெளியாகி வேகமாக பரவியது.

அதிமுக வேட்பாளரின் பரப்புரையில் பணப்பட்டுவாடா
உதயநிதி பரப்புரையில் பங்கேற்க வந்தவர்களுக்கு பணம் விநியோகம் - வசமாக சிக்கிய வீடியோ காட்சிகள்!

இத்தகைய சூழலில் அதிமுக வேட்பாளர் நாராயணசாமியின் பரப்புரையின்போதும் பணப்பட்டுவாடா செய்யப்பட்டதாக வீடியோ வெளியாகியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com