உதயநிதி ஸ்டாலின் பரப்புரையில் பணப்பட்டுவாடா
உதயநிதி ஸ்டாலின் பரப்புரையில் பணப்பட்டுவாடாpt web

உதயநிதி பரப்புரையில் பங்கேற்க வந்தவர்களுக்கு பணம் விநியோகம் - வசமாக சிக்கிய வீடியோ காட்சிகள்!

தேனியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பரப்புரையில் பங்கேற்க வந்தவர்களுக்கு திமுவினர் பணம் கொடுக்கும் காட்சிகள் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
Published on

தேனி நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வனை ஆதரித்து திமுக மாநில இளைஞரணி செயலாளரும் அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின், பங்களாமேடு பகுதியில் வேனில் இருந்தபடியே பரப்புரை மேற்கொண்டார். இதற்காக திமுக மற்றும் கூட்டணி கட்சி தொண்டர்கள், பொதுமக்கள் திரளானோர் வந்திருந்தனர். பரப்புரை முடித்து உதயநிதி ஸ்டாலின் பெரியகுளம் புறப்பட்டு சென்ற பிறகு அங்கு வந்த பெண்கள் உள்ளிட்டோருக்கு தலா 200 ரூபாய் விநியோகம் செய்யப்பட்ட வீடியோ வெளியாகி உள்ளது. தேர்தல் விதிமுறையை மீறி பணப்பட்டுவாடா செய்யப்பட்ட விவகாரம் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com