eps with ajith kumar frame
eps with ajith kumar frameweb

விஜய் கிடைக்காததால் அஜித் ரசிகர்களுக்கு குறி..? அதிமுகவின் வியூகம் என்ன..?

அதிமுக-தவெக கூட்டணி அமையாத நிலையில், அஜித் ரசிகர்களை குறிவைத்து அதிமுக அடுத்தகட்ட பிளானை செயல்படுத்துகிறதா என்ற கேள்வி எழுந்திருக்கிறது.
Published on
Summary

தமிழக அரசியலில் விஜயின் தவெக வருகையால் அதிமுக-திமுக சமநிலை குலைந்த நிலையில், முதலில் விஜயை கூட்டணிக்குள் இழுக்க முயன்ற அதிமுக, அவர் முதல்வர் வேட்பாளராக அறிவித்தபின் கடுமையாக விமர்சிக்கிறது. இந்நிலையில் எடப்பாடி பழனிசாமி கூட்டங்களில் அஜித் படங்கள் ஏற்றுக்கொள்ளப்பட, எஸ்.பி.வேலுமணி அஜித் ரசிகர்களை நேரில் சந்தித்து ஆதரவு கோருவது, விஜயால் இழந்த இளைஞர் வாக்குகளை அஜித் ரசிகர்கள் மூலம் ஈடு செய்யும் புதிய வியூகமாக பார்க்கப்படுகிறது.

செய்தியாளர் - பிரவீன் ஜோஸ்வா

தமிழ்நாடு அரசியலில் விஜயின் தமிழக வெற்றிக் கழகத்தின் வருகை அரசியல் போக்கையே மாற்றியமைத்துள்ளது. திமுக, அதிமுக என இரு பெரும் கட்சிகளுக்கு இணையாக தவெகவின் நிகழ்ச்சிகளுக்கு பொதுமக்கள் வருகை தருவது அக்கட்சியை முக்கியத்துவம் வாய்ந்த கட்சியாக மாற்றியுள்ளது.

திமுக கூட்டணியில் தவெகவை முன்வைத்து காங்கிரஸ் நடத்திய பேச்சுவார்த்தை அகில இந்திய அளவில் கவனம் ஈர்த்தது. இது ஒரு பக்கம் என்றால் மறுபக்கம் அதிமுகவில் கூட்டணியில் தவெக இணையும் என்றே ஆரம்பத்தில் பேசப்பட்டது.

தவெக மாநாடு விஜய்
தவெக மாநாடு விஜய்PT

அதிலும் கரூர் சம்பவத்துக்கு பின்னர் அதிமுக தலைவர்கள் வெளிப்படையாகவே தவெகவுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்தனர். அதோடு சட்டமன்றத்திலேயே விஜய்க்கு ஆதரவாக குரல்கொடுத்தனர். மேலும் அதிமுக கூட்டத்தில் தவெக கொடிகளும் பறந்த நிலையில், அக்கட்சியின் பொதுச்செயலாளர் பழனிசாமி, கூட்டணிக்கு பிள்ளையார் சுழி போட்டு விட்டதாகவே கருத்து தெரிவித்தார்.

ஆனால் அதன் பின்னர் தவெக கூட்டத்தில் முதலமைச்சர் வேட்பாளர் விஜய்தான் என அறிவித்த நிலையில், விஜய் அதிமுகவோடு சேரமாட்டார் என்பது உறுதியானது. அதனைத் தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி மற்றும் அதிமுக நிர்வாகிகள் விஜயை கடுமையாக விமர்சிக்கத்தொடங்கினர்.

eps with ajith kumar frame
இணையத்தில் பரவிய `ஜனநாயகன்'.. இது குறித்து பேசுவாரா விஜய்? | Jana Nayagan Leak | Vijay

இந்த சூழலில், தற்போது எடப்பாடி பழனிசாமியின் பிரச்சார கூட்டத்தில் அவருக்கு சில இளைஞர்கள் நடிகர் அஜித்தின் படத்தை கொடுக்கும் நிகழ்வுகள் நடந்து வருகிறது. மேலும் அதிமுக முன்னாள் அமைச்சர்களின் நிகழ்ச்சியிலும் இதுபோன்ற நிகழ்வுகள் தொடர்ந்து வருகிறது. சமீபத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி நடிகர் அஜித் குமாரின் ரசிகர் மன்ற நிர்வாகிகளையும், ரசிகர்களையும் நேரடியாகச் சந்தித்து அவர்களுடன் கலந்துரையாடி அவர்களின் ஆதரவுகளை கோரினார். இதனால் விஜயால் ஏற்படும் இழப்பை அஜித் ரசிகர்களை கவர்வது மூலம் ஈடுகட்ட அதிமுக முடிவு செய்துள்ளதா என்ற கேள்வி எழுந்துள்ளது.

இது குறித்து புதிய தலைமுறை சார்பில் அதிமுகவின் மூத்த தலைவரும் முன்னாள் அமைச்சருமான ராஜேந்திர பாலாஜியிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், அஜித் ரசிகர்கள் 90 சதவீதம் அதிமுகவில்தான் இருக்கிறார்கள் என்றும், அவர்கள்தான் எடப்பாடி பழனிசாமியிடம் வந்து அஜித்தின் படத்தை கொடுக்கிறார்கள் என்று கூறியுள்ளார்.

ராஜேந்திர பாலாஜியின் பதில் குறித்து தவெக நிர்வாகி நிர்மல்குமாரிடம் கேட்டபோது அதிமுக தலைவர்கள் குழப்பத்தில் இருக்கிறார்கள் என பதிலளித்தார்.

eps with ajith kumar frame
முதல்முறை ஜனநாயகன் பற்றி பேசிய விஜய்.. அடுத்த நாளே இணையத்தில் கசிந்த படம்! பின்னணியில் யார்?

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com