“விமர்சனம் செய்ய முடியாத மனிதர் விஜயகாந்த்..” - ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன்

நடிகரும் தேமுதிக நிறுவனருமான விஜயகாந்த் உடல்நலக்குறைவால் இன்று காலாமானர். இந்நிலையில் அவரது மறைவுக்கு புதுச்சேரியின் துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் இரங்கல் தெரிவித்துள்ளார்.
ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன்
ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் புதிய தலைமுறை

தேமுதிக தலைவரும், நடிகருமான விஜயகாந்த் அவர்கள் உடல்நலக்குறைவால் இன்று காலமானார். அவருக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் திரைப்பிரபலங்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன்
🔴LIVE | RIP Vijayakanth | குவிந்த தொண்டர்கள்... கடும் போக்குவரத்து நெரிசல்!

அப்படி விஜயகாந்த் மறைவுக்கு புதுச்சேரியின் துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் இரங்கல் தெரிவித்துள்ளார்.

தமிழிசை சௌந்தரராஜன்
தமிழிசை சௌந்தரராஜன்

தமிழிசை சௌந்தரராஜன் வெளியிட்டுள்ள இரங்கலில், “ஒரு வெள்ளந்தியான நேர்மறையான நல்ல மனிதர். அரசியல், நண்பன் இப்படி எல்லா நிலைகளிலும் ஒரே முகம் படைத்தவர்... அம்முகம் நல்ல முகம், அவ்வளவுதான்.

ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன்
Remembering Vijayakanth | “ரொம்ப எளிமையான மனிதர்” - நடிகை ரோகிணி நெகிழ்ச்சி

அரசியல், திரைப்படத்துறை என்று அனைத்திலும் இவருக்கு ஒரே முகம்தான். இப்படி சாதாரண மனிதருக்கு இருக்க வேண்டிய அரிதிலும் அரிதான பணி இவருக்கு இருக்கிறது.

ஒட்டுமொத்தமாக கூறவேண்டும் என்றால் அவர் நல்லவர். இதற்கு மேல் அவரை விமர்சனமே செய்ய முடியாது. இவரின் இழப்பினை தனிப்பட்ட இழப்பாக ஒவ்வொருவரும் நினைப்பதற்கு காரணம் இதுதான். இந்த அளவிற்கு ஒவ்வொருவரின் மனதிலும் தனது இரக்கக் குணத்தினால் நெருக்கமானவர் இவர். என்னை பொறுத்தவரை பல உயரங்களை தொட்டிருக்க வேண்டிய மனிதர்” என்றுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com