Tamil Nadu’s Updated Electoral Roll Officially Released Today
அர்ச்சனா பட்நாயக்x

எஸ்.ஐ.ஆர் | வெளியானது தமிழ்நாட்டின் இறுதி வாக்களர் பட்டியல்.. எத்தனை பேர் நீக்கம்?

தமிழ்நாட்டில் எஸ்.ஐ.ஆர் பணிகளுக்குப் பிறகு, இறுதி வாக்காளர் பட்டியல் மாவட்ட வாரியாக இன்று காலை வெளியிடப்பட்ட நிலையில், தமிழ்நாடு முழுமைக்குமான பட்டியலை தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தற்போது வெளியிட்டுள்ளார்.
Published on

இந்தியாவில் வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தப் (SIR) பணிகளை கடந்த 2025ஆம் ஆண்டு தேர்தல ஆணையம் தொடங்கியது. முதற்கட்டமாக, பீகாரில் எஸ்.ஐ.ஆர் பணிகள் மேற்கொள்ளப்பட்டது. அப்போது, 65 லட்சத்திற்கும் மேற்பட்ட வாக்களர்களை நீக்கியிருந்தது தேர்தல் ஆணையம். இதையடுத்து, வாக்காளர்களின் உரிமைகளைப் பறிக்கும் நடவடிக்கையில் தேர்தல் ஆணையம் ஈடுபட்டிருப்பதாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டி இருந்தன.

தேர்தல் ஆணையம்
தேர்தல் ஆணையம் web

இந்நிலையில்தான், கடந்த ஆண்டே அக்டோபர் மாதம் தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கான எஸ்.ஐ.ஆர் அறிவிப்பை தேர்தல் ஆணையம் வெளியிட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. தொடர்ந்து, இம்மாநிலங்களில் எஸ்.ஐ.ஆர் பணிகளைத் தொடங்கி தற்போது வெற்றிகரமாக நடத்தியும் முடித்திருக்கிறது. தமிழ்நாட்டை பொறுத்தவரை எஸ்.ஐ.ஆர்-க்குப் பின் வெளியிடப்பட்ட வாக்களர்ப் பட்டியலில் 97 லட்சத்து 37 ஆயிரம் வாக்களர்கள் நீக்கப்பட்டிருந்தனர்.

Tamil Nadu’s Updated Electoral Roll Officially Released Today
தொகுதிப் பங்கீடு | ”உதய சூரியன் சின்னத்திலேயே போட்டியிடுகிறோம்” - மமக தலைவர் ஜவாஹிருல்லா!

இதைத் தொடர்ந்து, டிசம்பர் 19ஆம் தேதி முதல் பிப்ரவரி 10ஆம் தேதி வரை பெயர் சேர்க்க, நீக்க, திருத்தம் செய்ய தேர்தல் ஆணையத்தால் அவகாசம் வழங்கப்பட்டது. இதில் 44 லட்சம் பேர் மீண்டும் பெயர் சேர்க்க விண்ணப்பித்திருந்த நிலையில், இது தொடர்பான பணிகள் கடந்த 10ஆம் தேதி நிறைவடைந்தது. இந்த நிலையில், இறுதி வாக்காளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டுள்ளது. முன்னதாக, இன்று காலை தமிழ்நாடு முழுவதும் மாவட்ட வாரியாக இறுதி வாக்களர் பட்டியலை அந்தந்த மாவட்டங்களின் ஆட்சியர்கள் வெளியிட்டனர். இதனைத் தொடர்ந்து, இன்று மதியம் தமிழகம் முழுமைக்குமான இறுதி வாக்காளர் பட்டியலை தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் வெளியிடுவார் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த சூழலில்தான், தற்போது அவர் தமிழ்நாட்டின் வாக்காளர் பட்டியலை வெளியிட்டுள்ளார்.

தமிழக தேர்தல் அதிகார் அர்ச்சனா பட்நாயக்
தமிழக தேர்தல் அதிகார் அர்ச்சனா பட்நாயக்

அதன்படி, எஸ்.ஐ.ஆர்-க்குப் பிறகான தமிழ்நாட்டின் மொத்த வாக்களர்களின் எண்ணிக்கை 5 கோடியே 67 லட்சத்து 7 ஆயிரத்து 380. அதில், ஆண் வாக்களர்களின் எண்ணிக்கை 2 கோடியே 77 லட்சத்து 38 ஆயிரத்து 925. பெண் வாக்களர்களின் எண்ணிக்கை 2 கோடியே 89 லட்சத்து 60 ஆயிரத்து 838 பேர். மூன்றாம் பாலினத்தவர்களின் எண்ணிக்கை 7 ஆயிரத்து 617 என அர்ச்சனா பட்நாயக் தெரிவித்துள்ளார். அதன்படி, தமிழ்நாட்டில் எஸ்.ஐ.ஆருக்கு பிறகு நீக்கப்பட்ட வாக்களர்களின் மொத்த எண்ணிக்கை 74 லட்சத்து 7 ஆயிரத்து 207.

மேலும், வாக்காளர் பட்டியலில் தங்களது பெயர் இருக்கிறதா என்பதை https://electoralsearch.eci.gov.in என்ற இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம் எனத் தெரிவிக்கப்படிருக்கிறது.

Tamil Nadu’s Updated Electoral Roll Officially Released Today
SIR | தமிழ்நாட்டின் இறுதி வாக்களர் பட்டியல்., மாவட்ட வாரியாக இன்று வெளியீடு!
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com