2026-27ஆம் ஆண்டுக்கான தமிழ்நாடு இடைக்கால பட்ஜெட் இன்று தாக்கல்
2026-27ஆம் ஆண்டுக்கான தமிழ்நாடு இடைக்கால பட்ஜெட் இன்று தாக்கல்pt

இன்று தமிழ்நாடு இடைக்கால பட்ஜெட் தாக்கல்.. மக்களை கவரும் வகையில் அறிவிப்புகள் இருக்குமா?

தமிழ்நாடு இடைக்கால பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்படவிருக்கும் நிலையில் மக்களை கவரும் வகையில் அறிவிப்புகள் இருக்குமா? என்ற எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது.
Published on
Summary

தமிழ்நாடு அரசின் இடைக்கால பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்படுகிறது. திமுக அரசு மக்களை கவரும் திட்டங்களை அறிவிக்குமா என்ற எதிர்பார்ப்பு உள்ளது. தேர்தலுக்கு முன் மக்களை கவரும் வகையில் பல்வேறு அறிவிப்புகள் இடைக்கால பட்ஜெட்டில் இடம்பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

2026 சட்டமன்ற தேர்தலுக்காக தமிழகம் தயாராகி வரும் நிலையில், ஆளுங்கட்சியான திமுக மற்றும் எதிர்க்கட்சியான அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி, தவெக, நாதக உள்ளிட்ட கட்சிகள் தேர்தலில் வெல்லும் நோக்கத்தில் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன.

எடப்பாடி பழனிசாமி, தவெக தலைவர் விஜய், முதல்வர் ஸ்டாலின்
எடப்பாடி பழனிசாமி, தவெக தலைவர் விஜய், முதல்வர் ஸ்டாலின்Pt web

எப்போதும் திமுக தொடர்ந்து இரண்டு முறை ஆட்சிக்கு வந்ததில்லை என்பதால், இந்தமுறை ஆட்சியை தக்கவைக்கவேண்டும் என்ற முயற்சியில் பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை அறிவித்து வருகிறது. சமீபத்தில் மகளிர் உரிமைத்தொகை வாங்கும் பெண்களுக்கு அரசுத்தரப்பிலிருந்து ரூ.5000 வரவு வைக்கப்பட்டது பேசுபொருளாக மாறியது.

government employees do not need permission to write and publish books
தமிழ்நாடு அரசுx page

இந்நிலையில் இன்று தேர்தலுக்கு முன்னதாக நடப்பாண்டுக்கான இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்படவிருக்கிறது. தேர்தல் முடிந்து ஆட்சியமைக்கும் அரசே முழு பட்ஜெட்டை தாக்கல் செய்யும் என்பதால், அதற்கு முன்பு மக்களை கவரும் திட்டங்கள் திமுக அரசின் இடைக்கால பட்ஜெட்டில் இடம்பெறும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

2026-27ஆம் ஆண்டுக்கான தமிழ்நாடு இடைக்கால பட்ஜெட் இன்று தாக்கல்
Headlines | இன்று தமிழ்நாடு அரசின் இடைக்கால பட்ஜெட் தாக்கல் To உலகக்கோப்பையில் AUS-க்கு சிக்கல்!

தமிழ்நாடு அரசின் இடைக்கால பட்ஜெட் இன்று தாக்கலாகிறது. நிதியமைச்சர் தங்கம் தென்னரசு சட்டமன்றத்தில் காலை 9.30 மணியளவில் பட்ஜெட் உரையை வாசிக்க உள்ளார். அரசின் பதவிக்காலம் விரைவில் முடிவதால் இந்த பட்ஜெட் வழக்கமான முழு பட்ஜெட்டாக இல்லாமல் இடைக்கால பட்ஜெட்டாக அமைகிறது.

இடைக்கால பட்ஜெட்டில் புதிய அரசு அமைவது வரையிலான அரசின் செலவினங்களுக்கான நிதிஒதுக்கப்பட்டு அதற்கான ஒப்புதல்பெறப்படும். சட்டமன்றத் தேர்தலுக்குமுன் தாக்கலாகும் பட்ஜெட் என்பதால் மக்களை கவரும் வகையில்அறிவிப்புகள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பொதுபட்ஜெட்டைத் தொடர்ந்து வேளாண்பட்ஜெட்டை துறையின் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல்செய்கிறார்.

2026-27ஆம் ஆண்டுக்கான தமிழ்நாடு இடைக்கால பட்ஜெட் இன்று தாக்கல்
24ஆண்டுக்கு பின் வங்கக்கடலில் உருவானது.. 3 நாட்களுக்கு மழை.. வானிலை மையம் தகவல்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com