Headlines | இன்று தமிழ்நாடு அரசின் இடைக்கால பட்ஜெட் தாக்கல் To உலகக்கோப்பையில் AUS-க்கு சிக்கல்!
தமிழ்நாடு அரசின் 2026-27ஆம் ஆண்டுக்கான இடைக்கால நிதிநிலை அறிக்கை இன்று தாக்கல்.. சட்டமன்றத் தேர்தல் நெருங்குவதால் மக்களைக் கவரும் வகையில் புதிய அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்ப்பு..
தமிழ்நாட்டில் வேளாண் தொழிலை நம்பி இருப்பவர்களின் எண்ணிக்கை 25 சதவீதமாக குறைந்துள்ளது.... மாநில திட்டக்குழு துணை தலைவர் ஜெயரஞ்சன் தகவல்...
தெற்கு வங்கக் கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வுப் பகுதி... மேற்கு-வடமேற்கு பகுதியை நோக்கி நகர்ந்து மேலும் வலுப்பெறும் என வானிலை மையம் கணிப்பு...
தமிழகத்தில் காவிரி படுகை மற்றும் தென் மாவட்டங்களில் வரும் 21ஆம் தேதி கனமழைக்கு வாய்ப்பு.. புதுச்சேரி மாநிலம் காரைக்காலிலும் மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தகவல்...
மதுரையில் கட்டப்பட்டுள்ள புதிய மேம்பாலத்தை 21ஆம் தேதி திறந்துவைக்கிறார் முதல்வர் மு.க. ஸ்டாலின்.... மேம்பாலத்துக்கு நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் பெயர் சூட்டப்படுவதாகவும் அறிவிப்பு....
கொசு ஒழிப்பு நிதியிலும் திமுக அரசு ஊழல் செய்வதாக அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி கே.பழனிசாமி குற்றச்சாட்டு... திமுக ஆட்சியில் கொசுக்களுக்கு கொண்டாட்டம்; மக்களுக்கு திண்டாட்டம் என சாடல்...
திமுக ஆட்சியில் கொசுக்களுக்கு கொண்டாட்டம் என்ற எடப்பாடி கே. பழனிசாமியின் விமர்சனத்துக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் எதிர்வினை... கொசு மருந்து அடிக்கவில்லை என்று கூறும் அளவுக்கு பழனிசாமி வேலை இல்லாமல் உள்ளதாக விமர்சனம்...
சென்னையில் அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி கே.பழனிசாமியுடன் நயினார் நாகேந்திரன், எல்.முருகன் சந்திப்பு... மோடியின் வருகைக்கு முன் கூட்டணியை இறுதி செய்வது குறித்து ஆலோசித்ததாக தகவல்...
சட்டமன்றத் தேர்தலையொட்டி மிகப்பெரிய அளவில் பரப்புரை மேற்கொள்ளும் தமிழக பாஜக... நாளை நமதே; தமிழ்நாடும் நமதே என்ற பெயரில் 20 ஆயிரம் தெருமுனை பரப்புரைக் கூட்டத்தை நடத்த திட்டம்...
இந்தியா கூட்டணிக்கு மு.க.ஸ்டாலின் தலைமையேற்க வேண்டும்... காங்கிரஸ் மூத்த தலைவர் மணிசங்கர் அய்யர் கருத்து...
தமிழக காங்கிரஸாரின் சர்ச்சை பேச்சு குறித்து கார்கேவிடம் அறிக்கை கொடுத்த செல்வப்பெருந்தகை... பிரச்சினையை அகில இந்திய தலைமை சரி செய்யும் என்றும் நம்பிக்கை...
தொண்டர்களின் குரலுக்கு மதிப்பளித்து கூட்டணி முடிவை காங்கிரஸ் தலைமை எடுக்கும்... தமிழக காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் பேட்டி...
திமுக கூட்டணியை அவர்களே முடித்துவிடுவார்கள் என பாமக தலைவர் அன்புமணி விமர்சனம்.... துரோகம் மூலம் காங்கிரஸைதோற்கடிப்பதே திமுகதான் என்றும்கருத்து...
சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட விருப்பமனு அளித்தவர்களிடம் வரும் 20ஆம் தேதி முதல் நேர்காணல்... காலை, மாலை என இரண்டு கட்டங்களாக நடக்கும் என தேதிமுக தலைமை அறிவிப்பு...
புதுச்சேரியிலும் தவெகவுக்கு பொது சின்னம்... போட்டியிடும் முதல் தேர்தலிலேயே பொது சின்னம் பெற்றது தவெக...
தமிழ்நாடு பாஜக தலைவர் நயினார் நாகேந்திரனின் பேச்சுக்கு நடிகை த்ரிஷா கண்டனம்... இப்படி ஒரு அருவருக்கத்தக்க கருத்தை எதிர்பார்க்கவில்லை என்றும் ஆதங்கம்...
நடிகை த்ரிஷா குறித்த பேச்சுக்கு வருத்தம் தெரிவித்தார் நயினார் நாகேந்திரன்... வாய் தவறி வந்த வார்த்தைக்குமனப்பூர்வமான வருத்தம்தெரிவித்துக்கொள்வதாக பேட்டி...
அண்ணாமலை வெளியிட்ட ஊழல் குற்றச்சாட்டை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் டி.ஆர்.பாலு வாதம்... பத்து கப்பல் வாங்கவில்லை, இரண்டு கப்பல்களே வாங்கியதாகவும் விளக்கம்...
திமுக எம்.பி. டி.ஆர்.பாலுவை 3 மணி நேரம் குறுக்கு விசாரணை செய்ததாக அண்ணாமலை பேட்டி... பொது வாழ்வில் இல்லாத தன் மீது ஊழல் புகாரை முன்வைத்துள்ளதாகவும்குற்றச்சாட்டு...
வேலூர் பாலாற்றங்கரையில் களைகட்டிய மயானக் கொள்ளை திருவிழா... கிருஷ்ணகிரி, காஞ்சிபுரம் மாவட்டங்களிலும் அம்மன் வேடமணிந்து விழாவில் பங்கேற்றபக்தர்கள்...
வேலூர் மயான கொள்ளை விழாவில் 60 அடி தேர் சாய்ந்து விபத்து.... படுகாயம் அடைந்த 7 பேர் அரசு மருத்துவமனையில் அனுமதி....
உளுந்தூர்பேட்டை அங்காளம்மன் கோயில் மயான கொள்ளை திருவிழாவில், ரூபாய் நோட்டுகளை வாரி இறைத்த திமுக கவுன்சிலர்... போட்டி போட்டுக்கொண்டு ரூபாய் நோட்டுகளை பிடித்த பக்தர்கள்..
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் நடைபெற்ற மயானக் கொள்ளை திருவிழாவில் மோதல்.... பாமக நிறுவனர் ராமதாஸ் இல்லம் எதிரே கூடிய கூட்டத்தை தடியடி நடத்தி கலைத்தது காவல் துறை....
ஆபரண தங்கம் விலை சவரனுக்கு 960 ரூபாய் குறைந்தது.. சென்னையில் ஒரு சவரன் ஒரு லட்சத்து 15ஆயிரத்து 520 ரூபாய்க்கு விற்பனை..
3 நாள் சுற்றுப் பயணமாக இந்தியா வந்தார் பிரான்ஸ் அதிபர் மேக்ரான்... மும்பையில் பிரதமர் மோடியுடன் இன்று இருதரப்பு பேச்சுவார்த்தை....
5 நாட்கள் நடக்கும் தெற்குலக நாடுகளின் ஏஐ மாநாடு டெல்லியில் தொடக்கம்... மாநாட்டை தொடங்கி வைத்து, செயற்கை நுண்ணறிவு சார்ந்த கண்காட்சியை பார்வையிட்டார் பிரதமர் மோடி...
இந்தியாவில் நக்சலைட்கள் அச்சுறுத்தல் மார்ச் 31ஆம் தேதிக்குள் முடிவுக்கு வரும் என உள்துறை அமைச்சர் அமித் ஷா சூளுரை... நக்சலைட்களுக்கு எதிரான நடவடிக்கை இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளதாகவும் பேச்சு...
தன் மீதான 15 ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் குற்றச்சாட்டை நிரூபித்தால் அரசியல்விட்டே விலகத் தயார் என புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி பேச்சு... நிரூபிக்க தவறினால் அமித் ஷா அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய தயாரா எனவும் சவால்...
உலகம் முழுவதும் எக்ஸ் தளம் திடீரென முடங்கியதால் பயனாளர்கள் அவதி... தொழில்நுட்ப கோளாறு சரிசெய்யப்பட்டு மீண்டும்பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டதாகஅறிவிப்பு....
அமெரிக்காவின் ரோட் தீவில், ஐஸ் ஹாக்கி விளையாட்டு மைதானத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 3 பேர் பலி... குடும்பத் தகராறு பிரச்சினையில் தாக்குதல் நடத்தப்பட்டதாக காவல்துறை அதிகாரிகள் தகவல்...
இங்கிலாந்தில் தொடர் மழையால் செவர்ன், ஏவோன் ஆறுகளில் கடும் வெள்ளப்பெருக்கு.... வரலாற்றுச் சிறப்புமிக்க டியூக்ஸ்பரி தேவாலயத்தை வெள்ளம் சூழ்ந்தது...
வசந்தகால புத்தாண்டை வரவேற்க தயாராகும் சீன மக்கள்... பெய்ஜிங்கில் நடந்த நிகழ்ச்சியில் பார்வையாளர்களை பிரம்மிப்பில் ஆழ்த்திய ரோபோக்களின் சாகசங்கள்...
குரோஷிய நாட்டில் களைகட்டிய குளிர்கால கொண்டாட்டங்கள்... பல்வேறு வேடங்கள் இட்டு ஊர்வலமாக சென்ற மக்கள்...
பிரேசில் நாட்டில் வருடாந்திர கொண்டாட்டங்கள்.. ஆடல் பாடலுடன் உற்சாகத்தில் திளைத்த மக்கள்...
120 கிலோ மீட்டர் வேகத்தில் ஓடும் ரயில் மீது பந்தய விமானத்தை இறக்கி சாதனை... வெறும் 50 விநாடிகளுக்குள் விமானத்தை இறக்கி டேரியோ கோஸ்டா சாகசம்....
தனது 134 படங்களின் பாடல்கள், இசைப் பதிவுகளை பயன்படுத்த இசைஞானி இளையராஜாவுக்கு தடை... சரிகம நிறுவனத்திற்கு சாதகமாக டெல்லி உயர் நீதிமன்றம் இடைக்கால உத்தரவு...
மீண்டும் கமலின் தயாரிப்பில் புதிய படத்தில் நடிக்கும் நடிகர் சிவகார்த்திகேயன்... சிவக்குமார் முருகேஷன் இயக்கும் படத்திற்கு சேயோன் என பெயரிடப்பட்டுள்ளதாக அறிவிப்பு...
ஒரே நாளில் மறுவெளியீடு செய்யப்படும் விஜய், அஜித் படங்கள்... வரும் 20ஆம் தேதி கில்லி, துணிவு திரைப்படங்கள் ரி-ரிலீஸ் ஆவதால் ரசிகர்கள் உற்சாகம்...
வரும் 26ஆம் தேதி நட்சத்திர ஜோடியான விஜய் தேவரகொண்டா-ராஷ்மிகா திருமணம் நடக்கவிருப்பதாக தகவல்... இணையத்தில் வைரலாகும் திருமண அழைப்பிதழ் புகைப்படம்...
டி20 உலகக் கோப்பை தொடரில் சூப்பர் 8 சுற்றுக்குள் நுழைந்தது இங்கிலாந்து அணி... ஜேமி ஓவர்டான், சாம் கரண் நிகழ்த்திய மாயாஜாலத்தால் இத்தாலியை வீழ்த்தி வெற்றி...
டி20 உலகக்கோப்பை கிரிக்கெட்டில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான லீக் போட்டியில் இலங்கை அணி வெற்றி... 2 போட்டிகள் தோல்வியால், சூப்பர் 8 சுற்றுக்கான வாய்ப்பில் பின்தங்கும் ஆஸ்திரேலியா...

