\
Tamil Nadu Braces for 60 cm Above-Normal Rainfall
மழைANI

வடகிழக்கு பருவமழை ஏற்படுத்தப் போகும் தாக்கம்? தயார்நிலையில் இருக்கிறதா தமிழக அரசு?

தமிழகத்தில் இயல்பைவிட 60 சென்டி மீட்டர் அதிக மழை பெய்யக்கூடுமென கணிக்கப்பட்டுள்ள நிலையில், அதனை எதிர்கொள்ள தமிழக அரசு தயாராக இருக்கிறதா என்பதை பார்க்கலாம்.
Published on: 

தமிழகத்திற்கு அதிக மழையை கொடுக்கும் வடகிழக்கு பருவமழை காலம் அடுத்த மாதம் தொடங்க உள்ள நிலையில் இந்த ஆண்டு தமிழகத்தில் இயல்பைவிட அதிக மழை பதிவாக வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, நவம்பர் மாதத்தில் இயல்பைவிட சுமார் 60 சென்டிமீட்டர் வரை கூடுதல் மழை பதிவாக வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். இதில் கவனிக்க வேண்டிய முக்கிய அம்சம் என்னவென்றால், ஒரே நாளில் 50 சென்டிமீட்டர் வரை மிக கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக கூறப்படுவதுதான்.

El Nino
El Nino Reuters

குறிப்பாக சென்னை உள்ளிட்ட வடகிழக்கு மாவட்டங்கள் மற்றும் கடலோர மாவட்டங்களில் ஏதேனும் ஒரு பகுதியில், இத்தகைய அதீத மழைப்பொழிவு பதிவாக வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது. இதற்கு சூப்பர் எல் நினோவின் இரண்டாம் கட்ட தாக்கம் காரணமாக இருக்கலாம் என வானிலை ஆய்வாளர்கள் கருதுகின்றனர். முதற்கட்டத்தில் வறட்சி மற்றும் மழைப்பொழிவு குறைவு ஏற்பட்டது. இந்நிலையில், அக்டோபர் 15ஆம் தேதிக்குப் பிறகு வடகிழக்கு பருவமழையில் மாற்றம் ஏற்படலாம் என கணிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, கடல் பரப்பின் வெப்பநிலையும் இயல்பைவிட அதிகரித்திருப்பதாக கூறப்படுகிறது. கடல் வெப்பநிலையில் ஏற்படும் மாற்றம், வளிமண்டலத்தில் ஈரப்பதத்தை அதிகரித்து, கனமழைக்கான சூழலை உருவாக்கக்கூடும் என்பதால், வரும் வடகிழக்கு பருவமழை, தமிழகத்திற்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

Tamil Nadu Braces for 60 cm Above-Normal Rainfall
மின்வெட்டு நெருக்கடிக்கு தீர்வு? ரூ.1 லட்சம் வரை நிதியுதவி.. தமிழக அரசின் புதிய திட்டம்!

மறுபுறம், வரவிருக்கும் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தமிழக அரசும் தயாராகி வருகிறது. நீர்நிலைகள், நீர்வழித்தடங்களை சீரமைத்தல், பாதிப்புக்குள்ளாகும் பகுதிகளை முன்கூட்டியே கண்டறிதல், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்துதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. போதிய நிதி ஒதுக்கீடு செய்து, பணிகளை விரைவுபடுத்தினால், கனமழையால் ஏற்படும் பாதிப்புகளை முன்கூட்டியே கட்டுப்படுத்த முடியும் என துறை சார்ந்த நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

Tamil Nadu Braces for 60 cm Above-Normal Rainfall
தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மழை! - வானிலை மையம்
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com