\
RAIN
RAINANI

தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மழை! - வானிலை மையம்

தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு 20 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு என கணிக்கப்பட்டுள்ளது.
Published on
Summary

தமிழகத்தில் அடுத்த ஐந்து நாட்களுக்கு மழை நிலை தொடரும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

தமிழகத்தில் வரும் 29ஆம் தேதி வரை பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

மழை
மழைகோப்புப் புகைப்படம்

குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் வியாழக்கிழமை இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளது.

இதேபோல், ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்காலிலும் மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை மையம் கூறியுள்ளது. மேலும் 25, 26ஆம் தேதிகளில் 20 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

RAIN
தமிழகத்தில் 21 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு!
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com