\
Solar Panel Subsidy Scheme Starts TN Govt
Solar panel subsidy schemePTI

மின்வெட்டு நெருக்கடிக்கு தீர்வு? ரூ.1 லட்சம் வரை நிதியுதவி.. தமிழக அரசின் புதிய திட்டம்!

வீட்டின் கூரை மேல் மின்சார உற்பத்தி செய்யும் சோலார் பேனல்களை அமைப்பவர்களுக்கு ரூ.1 லட்சம் வரை மானியம் வழங்கும் திட்டத்தைத் தமிழக அரசு தொடங்கியுள்ளது.
Published on

செய்தியாளர்: துர்கா தேவி ச

முதல் முறையாக, வீட்டின் கூரை மேல் மின்சாரம் உற்பத்தி செய்யும் சோலார் பேனல்களை அமைப்பவர்களுக்கு ரூ.22,000 வரை நிதியுதவி வழங்கும் திட்டத்தை தமிழக அரசு செப்டம்பர் 21 அன்று தொடங்கி வைத்துள்ளது. 3KW மின்சாரம் உற்பத்தி செய்வதற்கான சோலார் பேனல்களுக்கு மத்திய அரசு மானியமாக ரூ. 78,000 வழங்குகிறது; இதனுடன் மாநில அரசு மானியம் ரூ. 22,000 வழங்கப்பட்டு, சுமார் 1 லட்சம் வரை இந்த மானியம் கிடைக்கும் எனக் கூறப்பட்டுள்ளது.

காலநிலை மாற்றம் போன்ற பல காரணங்களால் காற்றாலை மின்சார உற்பத்தியில் மிகப் பெரிய வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. இதனால், பல்வேறு மின்வெட்டுப் பிரச்னைகள் தமிழகத்தில் ஏற்பட்டிருக்கின்றன. இதைத் தொடர்ந்து, தமிழ்நாடு அரசு வெளிச்சந்தைகளில் இருந்து கூடுதல் விலை கொடுத்து மின்சாரத்தை வாங்கி வருகிறது. இந்த நிலையில், வீடுகளின் கூரை மேல் மின்சாரம் உற்பத்தி செய்வதற்கும், மின் கட்டணத்தைக் குறைப்பதற்கும், சூரிய வெப்பத்தில் இருந்து மின்சாரம் உற்பத்தி செய்யும் சோலார் பேனல்களை அமைத்திட ரூ. 22,000 வரை மானியம் வழங்கும் திட்டத்தைத் தமிழக அரசு தொடங்கியுள்ளது.

Home solar panel by PM surya ghar shceme
Home solar panel by PM surya ghar shcemePTI

ஏற்கெனவே மத்திய அரசின் பிரதம மந்திரி சூர்ய கர் திட்டத்தின் மூலம், 3KW வரையிலான மின்சாரம் உற்பத்தி செய்யும் சோலார் பேனல் அமைக்க ரூ.78,000 நிதியுதவி கிடைக்கும். இதனுடன் தற்போதைய மாநில அரசின் மானியத்தையும் சேர்த்துக்கொண்டால், வீட்டின் கூரை மேல் சோலார் பேனல் அமைப்பவர்கள் ஒரு லட்சம் ரூபாய் வரை நிதியுதவி பெற முடியும்.

Solar Panel Subsidy Scheme Starts TN Govt
"சோலார் திட்டத்திற்கு Party Fund" - அமைச்சர் நிர்மல்குமார்.. மின்சாரத்துறை வெள்ளை அறிக்கை வெளியீடு!

இதற்காக ரூ. 50 கோடி ஒதுக்கீடு செய்துள்ளதாக தமிழக மின்சாரத்துறை அமைச்சர் ஆர்.நிர்மல்குமார் சட்டமன்றத்தில் அறிவித்திருந்தார். எரிசக்தித் துறையால் வெளியிடப்பட்ட அரசாணையில், மத்திய அரசின் திட்டம் வரும் மார்ச் 2027-இல் முடிவடைவதற்குள் 1 லட்சம் பயனாளர்களைச் சேர்க்கும் வகையில் இத்திட்டம் செயல்படும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. தமிழ்நாடு எரிசக்தி கழகத்தின் இந்த முன்மொழிவுக்கு மாநில அரசு ஒப்புதல் அளித்தது.

CM Vijay
CM VijayPTI

TNGECL, மத்திய அரசு இணையதளத்திலிருந்து விண்ணப்பதாரர்களின் தரவுகளைப் பெற்று, சேவை செயல்பாட்டிற்கு வந்தபின், விண்ணப்பதாரர்களின் வங்கிக் கணக்கிற்கு நேரடியாக மாநில அரசின் மானியம் செலுத்தப்படும் என அறிவித்துள்ளது.

Solar Panel Subsidy Scheme Starts TN Govt
சோலார் வழக்கு: கேரள முதல்வர் இல்லத்தில் சோதனை நடத்திய சிபிஐ!

1KW மின்சாரம் உற்பத்தி செய்வதற்கான சோலார் பேனல்களுக்கு மானியமாக மத்திய அரசு ரூ. 30,000 வழங்குகிறது, அத்துடன் தற்போது மாநில அரசு ரூ. 5,000 மானியம் வழங்குகிறது. 2KW மின்சாரம் உற்பத்தி செய்யும் சோலார் பேனல் அமைக்க மத்திய அரசின் நிதி ரூ. 60,000-உடன் மாநில அரசு ரூ. 10,000 மானியம் வழங்குகிறது. 3KW மின்சாரம் உற்பத்தி செய்வதற்கான சோலார் பேனல்களுக்கு மத்திய அரசு மானியமாக ரூ. 78,000 வழங்குகிறது; இதனுடன் மாநில அரசு மானியம் ரூ. 22,000 வழங்கப்பட்டு, சுமார் 1 லட்சம் வரை இந்த மானியம் கிடைக்கும் எனக் கூறப்பட்டுள்ளது.

Solar Panel Subsidy Scheme Starts TN Govt
Solar panel subsidy schemePTI

விண்ணப்பதாரர்கள் மத்திய அரசின் pmsuryaghar.gov.in என்ற இணையதளம் வாயிலாகத் தங்களின் விவரங்களை உள்ளிட்டு சோலார் பேனல் அமைப்பதற்கான மாநில அரசின் மானியத்திற்கு பதிவு செய்துகொள்ளலாம். பின்னர் அரசு அதிகாரிகளால் விண்ணப்பம் பரிசீலிக்கப்பட்டு அங்கீகரிக்கப்படும். அடுத்து பின்பற்ற வேண்டிய வழிமுறைகளை அவர்களே எடுத்துரைப்பார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com