நடிகர் எஸ்.வி.சேகர்
நடிகர் எஸ்.வி.சேகர்web

”மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்..” சர்ச்சை பேச்சுக்கு வருத்தம் தெரிவித்த எஸ்.வி.சேகர்!

தமிழகத்தில் பெண்கள் பாதுகாப்பு குறித்த கேள்விக்கு சர்ச்சைக்குரிய பதில் சொன்னதற்கு மன்னிப்பு கேட்டார் எஸ்.வி.சேகர்..
Published on
Summary

நடிகர் எஸ்.வி.சேகர் தனது சர்ச்சை பேச்சுக்கு மன்னிப்பு கேட்டுள்ளார். பெண்கள் பாலியல் வன்கொடுமை குறித்து அவர் தவறான கருத்து கூறியதாக விமர்சனம் எழுந்த நிலையில், தனது கருத்து தவறாக புரிந்துகொள்ளப்பட்டதாகவும், யாரையும் குறிக்கவில்லை எனவும் விளக்கம் அளித்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திக்குளத்தில் 17 வயது சிறுமி வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு, உடல் துண்டு துண்டாக வெட்டப்பட்டு சடலமாக மீட்கப்பட்டார். அதேபோல் மதுராந்தகம் அருகே, 14 வயதுச் சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு, இரவு முழுவதும் காட்டுப் பகுதியில் பரிதவித்து, காலையில் பல கிலோமீட்டர் நடந்தே மருத்துவமனைக்கு சென்று சேர்ந்தார்.

இப்படி தமிழகத்தில் நாளுக்கு நாள் பெண்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாகி வரும் நிலையில், பெண்களை ஏன் வெளியே அனுப்புகிறீர்கள் என்ற கேள்வியை நடிகர் எஸ்.வி.சேகர் எழுப்பியுள்ளார்.

பெண்கள் பாலியல் வன்கொடுமை
பெண்கள் பாலியல் வன்கொடுமை

செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர், என் வீட்டில் வேலை பார்க்கும் பெண்ணை சோப்பு வேண்டுமென்று சொன்னால் கூட வெளியே போகவிடமாட்டேன் என்றும், சட்டம் ஒழுங்கு சரியில்லை என சொல்கிறார்கள் அந்த பெண் ஏன் புதருக்கு பின்னால் போகணும் என்றும் பேசியுள்ளார். அவருடைய பேச்சு பெண்கள் வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது என்பது போல சித்தரித்த நிலையில் விமர்சனம் எழுந்தது.

இந்தசூழலில் அவருடைய பேச்சுக்கு மன்னிப்பு கேட்டுள்ளார் நடிகர் எஸ்.வி.சேகர்..

நடிகர் எஸ்.வி.சேகர்
“அந்த பெண் ஏன் புதருக்கு பின்னால் போகணும்..” நடிகர் எஸ்.வி.சேகர் சர்ச்சை பதில்!

மன்னிப்பு கேட்ட எஸ்.வி.சேகர்..

தன்னுடைய சர்ச்சை பேச்சு குறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருக்கும் எஸ்.வி.சேகர், “யாரையும் குறிப்பாக இறந்து போனவர்களை பற்றி தவறாகபேசுவது தவறு என நினைப்பவன் நான். நேற்று பொதுவாக பெண்களுக்கு பெற்றோர் அதிக பாதுகாப்பாக இருக்க வேண்டும் என் சொன்னது தவறாக புரிந்து கொள்ளப்பட்டு விட்டதாக அறிகிறேன். சம்மந்தப்பட்ட அனவருக்கும் என் மன்னிப்பை கேட்டுக்கொள்கிறேன்” என பதிவிட்டுள்ளார்.

மேலும் வீடியோ ஒன்றையும் வெளியிட்டு மன்னிப்பு கோரியுள்ளார்.

நடிகர் எஸ்.வி.சேகர்
பொன்ராஜ் மீது சட்ட நடவடிக்கை வேண்டும்.. டிஜிபி அலுவலகத்தில் நேரில் சென்று விஜய் புகார்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com