10-ம் வகுப்பு மாணவிக்கு திருமணம் செய்துவைக்க முயன்ற குடும்பம்... மாணவி எடுத்த விபரீத முடிவு!

குடும்பத்தார் தனக்கு திருமணம் செய்து வைக்க முயன்றதால் பள்ளி சென்ற 10ம் வகுப்பு மாணவி தற்கொலை செய்துகொள்ள முயன்ற சம்பவம் அரக்கோணத்தில் அரங்கேறியுள்ளது. நல்வாய்ப்பாக சிறுமி காப்பாற்றாப்பட்டுவிட்டார்.
தற்கொலைக்கு முயன்ற மாணவி
தற்கொலைக்கு முயன்ற மாணவிpt

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த செம்பேடு கிராமத்தை சேர்ந்தவர்கள் ஆறுமுகம், பரிமளா தம்பதியினர். விவசாய கூலித்தொழிலாளர்களான இவர்களுக்கு இரண்டு மகள்கள், ஒரு மகன் உள்ளனர். மூத்த மகளுக்கு திருமணம் ஆன நிலையில், இளைய மகள் குருவராஜபேட்டையில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்துள்ளார்.

தற்கொலைக்கு முயன்ற மாணவி
தஞ்சை | "சத்தம் போட்டால் கொலை செய்து விடுவோம்" - வீட்டிலிருந்த பெண்களை துரத்தி செயின் பறிப்பு!

தந்தை ஆறுமுகத்திற்கு இரண்டு சிறுநீரகங்களும் பாதிக்கப்பட்டு அவர் சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது. ஆகையால் அவர் 2-வது மகளுக்கு திருமணம் செய்ய முயற்சித்து வந்ததாக கூறப்பட்டு வந்த நிலையில், 10ம் வகுப்பு படிக்கும் அந்த 15 வயது மாணவி, நேற்று பள்ளியில் மயங்கி விழுந்துள்ளார். விசாரணையில் சிறுமி தான் விஷத்தன்மைகொண்ட செடியொன்றின் சாறை குடித்துவிட்டதாக கூறியதையடுத்து, உடனடியாக அரக்கோணம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார்.

சிகிச்சையில் பள்ளி மாணவி
சிகிச்சையில் பள்ளி மாணவி

இது குறித்து தகவலறிந்து வந்த அரக்கோணம் காவல் துறையினர், பள்ளி மாணவி மற்றும் பெற்றோரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் அரசு பள்ளி வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் மாணவி தற்போது நலமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

தற்கொலைக்கு முயன்ற மாணவி
வாணியம்பாடி: சிறை வளாகத்திலேயே மது அருந்திய தலைமை காவலர்.. வீடியோ வைரலானதால் பாய்ந்த நடவடிக்கை!

குழந்தை திருமணம் என்பது குற்றம். மற்றும் அரசால் தடைசெய்யப்பட்ட ஒன்று. இப்படியான கட்டாய மற்றும் குழந்தை திருமணங்களிலிருந்து தப்பிக்க, 1098 என்ற எண் மூலம் குழந்தைகள் நல குழுவினரை மாணவ மாணவியர் தயங்காமல் தொடர்பு கொள்ளலாம். தங்களுடன் பயிலும் மாணவிகள் யாருக்கேனும் இப்படி நடப்பது தெரிந்தால், உடன் பயிலும் மாணவ மாணவியர் கூட 1098 மூலம் புகாரளித்து, உங்கள் தோழியை பாதுகாக்கலாம். இந்த எண்ணில் புகாரளிக்கையில், உங்களின் விவரம் முழுமையாக பாதுகாக்கப்படும். பெற்றோரும், தங்கள் குழந்தைகளுக்கு புத்தகங்களை கொடுத்து பள்ளிக்கு அனுப்புவதற்கே முன்னுரிமை கொடுக்க வேண்டும்.

தற்கொலை எதற்கும் தீர்வல்ல. மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் வந்தாலோ, அதில் இருந்து விடுபடுவதற்கு தமிழக சுகாதார சேவை உதவி மையம் - 104 , சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044-24640050 ஆகிய எண்களை அழைக்கலாம்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com