திருப்பூர்: நண்பர்களுடன் சேர்ந்து பரோட்டா சாப்பிட்டுவிட்டு தூங்கச் சென்ற மாணவர் திடீர் மரணம்!

திருப்பூரில் பரோட்டா சாப்பிட்டு விட்டு தூங்கச் சென்ற கல்லூரி மாணவர், மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
உயிரிழந்த மாணவர்
உயிரிழந்த மாணவர்புதியதலைமுறை

திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஹேமச்சந்திரன். இவர் கோவை மாவட்டம், சூலூரில் தங்கி அங்குள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் படித்து வந்தார்.

இந்நிலையில், நேற்று இரவு ஹேமச்சந்திரன் தனது நண்பர்களுடன் சேர்ந்து கண்ணம்பாளையம் பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றில் பரோட்டா சாப்பிட்டுவிட்டு, அறைக்கு உறங்கச் சென்றுள்ளார்.

தொடர்ந்து, இன்று காலையில் நீண்ட நேரமாகியும் தூகத்தில் இருந்து எழாமல் அசைவின்றி கிடந்துள்ளார். இதனைப்பார்த்து அதிர்ச்சியடைந்த சக மாணவர்கள், அவரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்களோ ஹேமச்சந்திரன் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

உயிரிழந்த மாணவர்
டைவ் அடித்து பிடித்த அசத்தலான கேட்ச்! சாய் சுதர்சனுக்காக கே.எல்.ராகுல் செய்த சர்ப்ரைஸ் செயல்!

சம்பவம் குறித்து சூலூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலிசார் மாணவனின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பிய வைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணையும் மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த விவகாரத்தில் போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், மாணவருக்கு பரோட்டா சாப்பிட்டால் ஒவ்வாமை ஏற்படும் என்ற பிரச்சனை இருந்ததாகவும், அதிக காய்ச்சலில் இருந்தவர், பரோட்டா சாப்பிட்டதால் உயிரிழந்திருக்கலாம் என தெரியவந்துள்ளது. முழு தகவல் பிரதேப்பரிசோதனைக்குப் பிறகே தெரியவரும். மாணவனின் திடீர் உயிரிழப்பு அவருடைய குடும்பத்தார் மற்றும் நண்பர்கள் வட்டாரத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

உயிரிழந்த மாணவர்
சஞ்சய் சிங் மல்யுத்த தலைவரானதற்கு எதிர்ப்பு! ”பத்மஸ்ரீ” விருதை திருப்பியளிக்கும் பஜ்ரங் புனியா!

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com