‘ஊருக்கு போறீங்களா?’ சென்னையில் செயல்பட இருக்கும் தற்காலிக பேருந்து நிலையங்கள் லிஸ்ட் இதோ!

தமிழ்நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் இருந்து தீபாவளி சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
சிறப்புப் பேருந்துகள்
சிறப்புப் பேருந்துகள்pt web

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் 17,587 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. சென்னையில் இருந்து மட்டும் 2100 பேருந்துகளுடன் 4675 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. எப்போதுமே பேருந்துகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் சூழல்களில், கூட்ட நெரிசலையும் தவிர்க்கும் பொருட்டு சிறப்புப் பேருந்துகள் வேறுபகுதிகளில் உள்ள பேருந்து நிலையங்களில் இருந்து இயக்கப்படுவது வழக்கம்.

அந்தவகையில் இந்தாண்டும் மூன்று நாட்கள் (இன்று, நாளை மற்றும் நாளை மறுநாள்) கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டும் பயணிகளின் வசதிக்காகவும் சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கப்படுகின்ற பேருந்துகள் தற்காலிக பேருந்து நிலையங்களில் இருந்து இயக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சிறப்புப் பேருந்துகள்
நள்ளிரவில் ஏற்பட்ட விபத்து: தூக்கி வீசப்பட்ட தூய்மைப் பணியாளர்.. கனரக வாகனம் ஏறியதில் பரிதாப பலி

அதன் விவரம் இங்கே:

- மாதவரம் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து செங்குன்றம் வழியாக பொன்னேரி, கும்மிடிப்பூண்டி, ஊத்துக்கோட்டை மற்றும் திருப்பதி செல்லும் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

- கே.கே.நகர் பேருந்து நிலையத்தில் இருந்து இ.சி.ஆர் வழியாக புதுச்சேரி, கடலூர் மற்றும் சிதம்பரம் செல்லும் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

- தாம்பரம் அறிஞர் அண்ணா பேருந்து நிலையத்தில் இருந்து திண்டிவனம் வழியாக கும்பகோணம் மற்றும் தஞ்சாவூர் செல்லும் பேருந்துகள் இயக்கப்படும்.

- பூவிருந்தவல்லி பைபாஸ் சாலை பேருந்து நிறுத்தத்தில் இருந்து வேலூர், ஆரணி, ஆற்காடு, திருப்பத்தூர், காஞ்சிபுரம், செய்யாறு, ஓசூர் செல்லும் பேருந்துகள் இயக்கம்படும் என போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.

இதை தவிர அரியலூர், ஜெயங்கொண்டம், நாகை, திருச்சி, மதுரை, நெல்லை, செங்கோட்டை, தூத்துக்குடி, திருச்செந்தூர், கள்ளக்குறிச்சி, காரைக்குடி, ராமநாதபுரம், சேலம் மற்றும் கோவை உள்ளிட்ட பகுதிகளுக்கு கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்படுவதாக அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com