நள்ளிரவில் ஏற்பட்ட விபத்து: தூக்கி வீசப்பட்ட தூய்மைப் பணியாளர்.. கனரக வாகனம் ஏறியதில் பரிதாப பலி

சென்னை திருவான்மியூர் ஆர்.டி.ஓ. அலுவலகம் அருகே சாலை விபத்தில் தூய்மைப் பணியாளர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சிவகாமி (கட்டத்தில் இருப்பவர்)
சிவகாமி (கட்டத்தில் இருப்பவர்)pt web

சென்னை ஆர்.டி.ஓ. அலுவலகம் அருகே நேற்று இரவு துப்புரவுப் பணியில் ஈடுபட்டிருந்த சிவகாமி என்பவர் துப்புரவுப் பணியில் ஈடுபட்டுக் கொண்டு இருந்த போது அதிகாலையில் ஐடி வேலை முடித்துவிட்டு வந்துகொண்டிருந்த அஷ்வந்த் என்பவரது கார் அவர்மீது வாகனம் மோதியது.

இதில் சிவகாமி நிலைதடுமாறி கீழே விழுந்துள்ளார். அப்போது மறுபறும் எதிர்சாலையில் வந்த கனரக வாகனம் (லாரி) சிவகாமியின் மீது ஏறியதில் சிவகாமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இச்சம்பவத்தில் லாரி ஓட்டுநர் தப்பித்துவிட்ட நிலையில், கார் ஓட்டிவந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com