“பொன்முடி குற்றம் செய்தாலும் நிரூபிக்கிற அளவு ஆதாரம் கிடைக்காது; காரணம்...” - தராசு ஷ்யாம்

பொன்முடி குற்றம் செய்தார் என்றே வைத்துக்கொண்டாலும் நீதிமன்றத்தில் நிரூபிக்கக்கூடிய அளவுக்கான ஆதாரங்கள் கிடைக்காது என்கிறார் மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம்.
பொன்முடி - தராசு ஷ்யாம்
பொன்முடி - தராசு ஷ்யாம்கோப்புப்படம்

தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று காலை முதல் திடீர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். ஏற்கெனவே, திமுக அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டில் கடந்த ஜூன் மாதம் 13-ம் தேதி திடீர் சோதனை மேற்கொண்ட அமலாக்கத்துறை அதிகாரிகள் அன்றிரவே அவரைக் கைது செய்தனர். இந்த வேளையில் தான், தற்போது அமைச்சர் பொன்முடி வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டிருக்கின்றனர்.

சென்னை சைதாப்பேட்டையில் ஸ்ரீநகர் காலனி மற்றும் விழுப்புரத்தில் உள்ள பொன்முடியின் வீடுகள், அலுவலகங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று காலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர். மேலும், பொன்முடியின் மகனும், நாடாளுமன்ற உறுப்பினருமான கௌதம சிகாமணி வீட்டிலும் இந்த சோதனை நடைபெற்றுவருவதாகக் கூறப்படுகிறது.

அமைச்சர் பொன்முடி இல்லம் - அமலாக்கத்துறை ரெய்டு
அமைச்சர் பொன்முடி இல்லம் - அமலாக்கத்துறை ரெய்டுபுதிய தலைமுறை
பொன்முடி - தராசு ஷ்யாம்
அமைச்சர் பொன்முடியின் பூட்டிய வீடு முன் காத்திருந்த ED அதிகாரிகள்! விழுப்புரத்தில் என்ன நடந்தது?

அமலாக்கத்துறையினரின் இந்த சோதனை குறித்து கருத்து தெரிவித்திருக்கும் மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம், ''2006, 2011 ஆகிய காலக்கட்டத்தில் அமைச்சராக இருந்த பொன்முடி மீது போடப்பட்ட வழக்கில்தான் இப்போது சோதனை நடக்கிறது.

மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம்.
மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம்.

இந்த வழக்கில் இருந்து அவர் விடுதலையாகி விட்டார். 10 வருடங்கள் கழித்துதான் அமலாக்கத்துறை களத்தில் குதிக்கிறது.

இதில் இப்போது என்ன ஆதாரம் கிடைத்துவிடப் போகிறது? பொன்முடி குற்றம் செய்தார் என்றே வைத்துக்கொண்டாலும் நீதிமன்றத்தில் நிரூபிக்கக்கூடிய அளவுக்கான ஆதாரங்கள் கிடைக்காது. காரணம் காலதாமதம். ஆனாலும் நடவடிக்கை எடுக்கிறார்கள். சூப்பர் சிபிஐயாக அமலாக்கத்துறை செயல்படுகிறது'' என்று கூறியுள்ளார்.

பொன்முடி - தராசு ஷ்யாம்
அமைச்சர் பொன்முடியின் மேல் நிலுவையில் உள்ள வழக்குகள் எத்தனை? டார்கெட் செய்யப்படுகிறாரா பொன்முடி?

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com