Seeman
Seemanpt desk

திருப்பதி தேவஸ்தானத்தில் இரண்டு இஸ்லாமியர்களை சேருங்கள் பார்ப்போம் - சீமான் கேள்வி

தமிழக இந்து சமய அறநிலையத் துறையில் பல ஏக்கர் கோயில் நிலங்கள் ஆக்கிரமிப்பில் உள்ளது அதனை கண்காணிக்க இரண்டு இஸ்லாமியர்களை நியமிக்க முடியுமா? என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார்.
Published on

செய்தியாளர்: முருகேசன்

வக்ஃப் சட்ட திருத்தத்தை உடனடியாக திரும்பப் பெற வலியுறுத்தி நாம் தமிழர் கட்சியின் சார்பாக மாவட்ட தலைநகரங்களில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்நிலையில், சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே நடைபெற்ற ஆரப்;பாட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டார்.

வக்ஃப்  வாரிய சட்டத் திருத்த மசோதா
வக்ஃப் வாரிய சட்டத் திருத்த மசோதா pt

இந்து சமய அறநிலையத் துறையில் முறைகேடு நடக்கவில்லையா?

முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த சீமான் பேசியபோது. வக்ஃப் வாரிய சட்டத்தில் ஏற்கனவே இருந்த நடைமுறை மாற்றப்பட்டுள்ளது என்பது ஆபத்தான போக்கு இந்து மக்கள் மனதை மகிழ்விக்க இது போல் கொண்டு வந்துள்ளனர் இஸ்லாமியர்கள் வாக்கு வேண்டாம் என்பதற்காகவும் இது போல் செய்துள்ளனர். இது பேரபாயத்தை உண்டு பண்ணும். தமிழகத்தில் உள்ள இந்து சமய அறநிலையத் துறையில் 38 லட்சம் ஏக்கர் உள்ளது என்கிறார்கள். அதில், ஏதும் முறைகேடு நடக்கவில்லையா?. அதைப் பற்றி விசாரிப்பதற்கு இஸ்லாமியர்கள் கிறிஸ்தவர்களை கொண்ட குழுவை அமைப்பீர்களா?.

Seeman
நயினார் சொன்ன ஒரே வார்த்தை... அண்ணாமலை செய்த சம்பவம்! மேடையில் நடந்தது என்ன..?

திருப்பதி தேவஸ்தானத்தில் இரண்டு இஸ்லாமியர்களை சேருங்கள் பார்ப்போம்:

அரபு நாடுகளில் பெரிய பெரிய அளவில் இந்து கோயில்களைக் கட்டி உள்ளனர். நமது பிரதமர் அங்கு சென்று கோயிலை திறந்து வைத்து உரையாற்றி உள்ளார். பாகுபாடு பார்த்துக் கொண்டிருப்பது தேசப்பற்றுக்கு எதிரானது. கடந்த கால நிகழ்வுகளால் மக்கள் அச்சத்தில் உள்ளனர். திருப்பதி தேவஸ்தானத்தில் இரண்டு இஸ்லாமியர்களை சேருங்கள் பார்ப்போம். தமிழக இந்து சமய அறநிலையத் துறையில் இஸ்லாமியர்கள் சேர்க்க வேண்டும். அங்கு தான் பெரிய கோயில் நிலங்கள் ஆக்கிரமிக்கப்படுவதற்கான சான்றுகளை நானே தருகிறேன்.

udhayanidhi stalin
udhayanidhi stalinpt desk

கோயில் நிலத்தை ஆக்கிரமித்து விட்டீர்கள்:

கரூரில் லட்சக்கணக்கான மக்களுக்கு தேர்தல் நேரத்தில் கோயில் நிலத்தில் வீடு கட்டி குடியிருப்பது என கூறிய இந்த ஆட்சியாளர்கள் தான். இன்று கோயில் நிலத்தை ஆக்கிரமித்து விட்டீர்கள் என இடிப்பதும் இவர்கள் தான். அறிவு உள்ளவர்கள் ஆட்சியில் நடக்கும் செயலா இது. பொதுவான மக்களுக்கு அதிக கேள்விகள் உள்ளது. சட்டத்தை இயற்றி விட்டீர்கள். மேலும் மாநில அரசுகள் நிர்வகிக்கலாம் என கூற வேண்டும். மாவட்ட ஆட்சியர் யார் கட்டுபாட்டில் இருப்பார்கள் உளவுத் துறை சொல்வது தான் செய்வார்கள்.

Seeman
''நானே பாமக தலைவர்..'' பரபரப்பை கிளப்பிய அன்புமணி!

பஞ்சமி நிலத்தை மீட்டுத் தர வேண்டும்:

தம்பி உதயநிதி வக்ஃப் வாரிய இடத்தில் விளையாட்டு மைதானம் கட்டிக் கொடுத்தார். பஞ்சமி நிலத்தை மீட்க சட்டம் கொண்டு வந்து அந்த நிலத்தை மீட்டுத் தர வேண்டும். ரொம்ப நாள் ஏமாற்றிக் கொண்டிருக்க முடியாது. எங்களுக்கு அதிகாரம் வரும்போது நீங்கள் எளிதாக கடந்து செல்ல முடியாது. அமைச்சர் பொன்முடியை பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று சொல்வது என்னுடைய வேலையில்லை. கட்சிகளுக்கு மக்களின் வாக்குகள் தான் முக்கியம்.

இந்து சொத்துக்களை பராமரிக்க இரண்டு இஸ்லாமியர்கள் கிறிஸ்தவர்களை போட முடியுமா?

அண்ணாமலை மாற்றப்பட்டது குறித்து அந்தக் கட்சி தான் முடிவு எடுத்தது. அதில் கருத்து கூற முடியாது. இந்து சொத்துக்களை பராமரிக்க இரண்டு இஸ்லாமியர்கள் கிறிஸ்தவர்களை போட முடியுமா? நாற்பது முனை என்றாலும் நாங்கள்தான் கூர்முனை என்று தேர்தலில் தனித்து நிற்போம். இந்த நாட்டில் மக்களோடு தான் நிற்பேன். என்று சீமான் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com