தமிழக அரசியலில் விதி எண்110.. எம்ஜிஆர் முதல் விஜய் வரை நடந்தது என்ன?
முக்கியத்துவம் வாய்ந்த விவகாரங்கள், கொள்கை முடிவுகள் மற்றும் புதிய திட்டங்கள் குறித்து முதல்வரோ அல்லது அமைச்சரோ நேரடியாகச் சபையில் அறிக்கை தாக்கல் செய்ய விதி எண் 110 அனுமதிக்கிறது. இதன் சிறப்பம்சம் என்னவென்றால், இந்த அறிக்கைகள் மீது உடனடியாக விவாதம் நடத்தவோ அல்லது உறுப்பினர்கள் கேள்வி எழுப்பவோ முடியாது. 1980 முதல் 1984 வரை இது விதி 106 ஆக இருந்தது.
பின்னர் 1985இல் சட்டமன்ற விதிகள் குழுவின் பரிந்துரையின்படி விதி 110 ஆக மாற்றப்பட்டது. விசேஷம் என்னவென்றால், 1985 முதல் 1988 வரை 29 அறிக்கைகள் வெளியிடப்பட்டாலும், அப்போதைய முதல்வர் எம்.ஜி.ஆர் இந்த விதியின் கீழ் எந்த அறிக்கையையும் வெளியிடவில்லை. ஜெயலலிதா ஆட்சிக்காலத்தில் 110 விதியின் பயன்பாடு உச்சத்தை எட்டியது. 5 ஆண்டுகளில் அவர் மட்டும் 185 அறிக்கைகளை வெளியிட்டார். மு.க.ஸ்டாலின் ஆட்சிக் காலத்தில் 36 அறிக்கைகள் வெளியிடப்பட்டன. தவெக ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு, முதல்வர் விஜய் இதுவரை 18 முறை விதி 110இன் கீழ் அறிக்கைகளை தாக்கல் செய்து புதிய கவனத்தை பெற்றுள்ளார்.

