“தேர்தல் ஆணையத்தின் புதிய நடைமுறை - EVM மீது நம்பிக்கை இன்மையை ஏற்படுத்துகிறது” - ஆர்.எஸ்.பாரதி

“வாக்குப் பதிவு இயந்திரங்களில் புதிய நடைமுறையும், தொழில்நுட்பத்தையும் தேர்தல் ஆணையம் புகுத்துவது வாக்கு இயந்திரத்தின் மீது நம்பிக்கை இன்மையை ஏற்படுத்துகிறது” என்று திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்தார்.
RS Bharathi
RS Bharathi PT (file image)

செய்தியாளர்: ராஜ்குமார்

சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி மற்றும் திமுக சட்டத்துறை செயலாளர் என்.ஆர்.இளங்கோவன் இன்று செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது தேர்தல் ஆணையத்திற்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள வழக்கு குறித்து விளக்கினர்.

VVPAT
VVPATpt desk

அப்போது பேசிய ஆர்.எஸ்.பாரதி...

‘மாற்றத்தால் வந்த பிரச்னை என்ன?’

“தற்போது நடைபெறும் தேர்தலில் ஒரு புதிய சரத்தை இந்திய தேர்தல் ஆணையம் அறிமுகம் செய்துள்ளது. வாக்குப்பதிவு இயந்திரங்களில் முதல் தலைமுறை, இரண்டாம் தலைமுறை என (versions) இருந்த நிலையில் தற்போது மூன்றாவது தலைமுறையை அறிமுகம் செய்துள்ளார்கள். அதாவது முதலிலெல்லாம் வழக்கமாக வாக்காளர் செலுத்தும் ஓட்டு (voteBallot) செலுத்தியவுடன், அது முதலில் வாக்குப்பதிவு இயந்திரத்தில் (Control unit) பதிவாகும். பிறகு, VVPAT ல் வாக்காளர் தான் யாருக்கு வாக்கு செலுத்தினோம் என்பதை உறுதிசெய்து கொள்ள முடியும்.

RS Bharathi
VVPAT ஒப்புகை சீட்டுகளை எண்ணக் கோரிய வழக்கு: தேர்தல் ஆணையம் பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு

ஆனால் தற்போது கொண்டுவரப்பட்டுள்ள புதிய நடைமுறையில், வாக்காளர் செலுத்தும் ஓட்டு, முதலில் வாக்காளர் தான் யாருக்கு வாக்கு செலுத்தினோம் என்பதை உறுதிசெய்து கொண்ட பின்னர் (VVPAT-ல் காட்டிய பின்னர்) வாக்குப்பதிவு இயந்திரத்தில் (Control unit) ஓட்டு பதிவாகும் முறையில் மாற்றம் ஏற்படுகிறது. இது தேர்தல் ஆணையத்தின் Conduct of Electnio Rules 49(D) க்கு எதிரானது.

election commission
election commissionpt desk

‘நீதிமன்றத்தை நாடியுள்ளோம்’

சென்னையில் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் இதுகுறித்து தெரிவித்து தேர்தல் ஆணையத்தின் கவனத்திற்கு கொண்டு வந்தோம். இதைக் கேட்டு தலையை அசைத்து கொண்ட தேர்தல் ஆணையம், உரிய பதிலை இதுவரை வழங்கவில்லை. எனவே நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளோம்.

SLU தொழில்நுட்பம் - எழும் சந்தேகங்கள்...

கூடுதலாக VVPAT-ல் Symbol Loading Unit (SLU) எனும் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது. இது Randomization முடிந்த பிறகு நேரடியாக SLU தயாரிக்கும் நிறுவனத்தால் VVPAT-ல் பொருத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

SLU தயாரிக்கும் நிறுவனத்தில் பாஜகவை சேர்ந்தவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
RS Bharathi
வயநாட்டில் வேட்புமனு தாக்கல் செய்தார் ராகுல்.. பிரமாண்ட பேரணியில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு

வாக்கு பதிவு இயந்திரத்திற்கு முன்னர் VVPAT அமைக்கும் முறை, புதிய SLU மற்றும் அதனை தயாரிக்கும் நிறுவனத்தில் பாஜகவினர் நியமனம் உள்ளிட்டவை மிகுந்த சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. EVM மீது நம்பிக்கை இன்மையை ஏற்படுத்துகிறது.

RS Bharathi
தேர்தல் பத்திரங்கள் தொடர்பான வழிகாட்டு நடைமுறைகளை தெரிவிக்க எஸ்பிஐ வங்கி மறுப்பு

தேர்தல் ஆணையம் சொன்னது என்ன?

மேலும், தேர்தல் ஆணையத்தால் வெளியிடப்படும் Frequently Asked Questions (FAQ) பகுதியில், நாடு முழுவதும் பயன்படுத்தப்படும் 10.35 லட்சம் வாக்குப்பதிவு இயந்திரங்களில் 479 இயந்திரங்கள் மட்டுமே பரிசோதிக்கப்படுவதாகவும் அதிலும் 2 சதவீத இயந்திரங்கள் MisMatch எனும் தொழில்நுட்பக் கோளாறு உள்ளதாகவும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

madras high court
madras high courtpt desk

‘வெற்றி தோல்வியை தீர்மானிக்கும் வாக்குகள் கேள்விக்குறியாகும்...’

இதனை ஒரு தொகுதிக்கு பொறுத்திப் பார்த்தல் 2 சதவீதம் Error என்பது உதாரணத்திற்கு ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் 22 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். இதில் 2 சதவீதம் என்பது 44 ஆயிரம் வாக்குகள். ஒவ்வொரு தொகுதிக்கும் இத்தனை வாக்குகள் Error ஏற்படும் அதற்கு தீர்வு (Rectification) இல்லை என்பது ஏற்புடையது இல்லை. ஒரு நாடாளுமன்றத் தேர்தலில் 44 ஆயிரம் வாக்குகள் Error ஏற்பட வாய்ப்புள்ளது என்பது வெற்றி தோல்வியை தீர்மானிக்கும் வாக்குகளாக இருக்கலாம். எனவே நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளோம்” என்றார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com