வயநாட்டில் வேட்புமனு தாக்கல் செய்தார் ராகுல்.. பிரமாண்ட பேரணியில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு

கேரள மாநிலம் வயநாட்டில் மீண்டும் போட்டியிடும் ராகுல் காந்தி இன்று வேட்பு மனு தாக்கல் செய்தார்.
ராகுல்காந்தி வேட்புமனுத் தாக்கல்
ராகுல்காந்தி வேட்புமனுத் தாக்கல்pt web

கேரளாவில் உள்ள 20 தொகுதிகளுக்கு ஏப்ரல் 26ஆம் தேதி ஒரே கட்டமாக மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது. இதில் வயநாடு தொகுதியில் ராகுல் காந்தியை எதிர்த்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியப் பொதுச்செயலாளர் டி. ராஜாவின் மனைவி ஆனி ராஜாவும், பாஜகவில் அக்கட்சியின் மாநில தலைவர் சுரேந்திரனும் போட்டியிடுகின்றனர்.

ராகுல்காந்தி வேட்புமனுத் தாக்கல்
“I.N.D.I.A கூட்டணியில் உள்ள இடது சாரிகளை எதிர்த்து ராகுல்காந்தி போட்டியிடுவது ஏன்?” - பினராயி விஜயன்

வேட்புமனுத் தாக்கலின் கடைசி நாளான இன்று ராகுல்காந்தி தனது வேட்புமனுவை தாக்கல் செய்துள்ளார். வயநாட்டில் ராகுல் காந்தி வேட்பு மனுத் தாக்கல் செய்யும் போது ஒரு மெகா ரோடு ஷோ நடத்தப்படும் என கேரள காங்கிரஸ் பொறுப்பாளர் விஸ்வநாதன் ஏற்கனவே தெரிவித்திருந்தார். அதன்படியே மெகா ரோடு ஷோ நடத்தப்பட்டது.

பல்லாயிரக்கணக்கான தொண்டர்கள் இந்த பேரணியில் கலந்துகொண்டனர். வேட்புமனுத் தாக்கலின் போதும் ரோடு ஷோவின் போதும் பிரியங்கா காந்தியும் உடன் இருந்தார்.

கடந்த தேர்தலில் ராகுல் காந்தி வயநாடு தொகுதியில் 4 லட்சத்து 31 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com