தேர்தல் பத்திரங்கள் தொடர்பான வழிகாட்டு நடைமுறைகளை தெரிவிக்க எஸ்பிஐ வங்கி மறுப்பு

தேர்தல் பத்திரங்கள் தொடர்பான நிலையான வழிகாட்டு நடைமுறைகளை தெரிவிக்க எஸ்பிஐ வங்கி மறுப்பு தெரிவித்துள்ளது.
உச்ச நீதிமன்றம், எஸ்.பி.ஐ.
உச்ச நீதிமன்றம், எஸ்.பி.ஐ.ட்விட்டர்

அரசியல் கட்சிகள் நன்கொடை பெறும் தேர்தல் பத்திர திட்டத்தை ரத்து செய்து உச்சநீதிமன்றம் கடந்த மாதம் உத்தரவிட்டது. இதையடுத்து தேர்தல் பத்திரங்களை வாங்கியவர்கள், நன்கொடை பெற்ற கட்சிகளின் விவரங்களையும் வெளியிட நீதிமன்றம் ஆணையிட்டதைத் தொடர்ந்து, அதனை எஸ்பிஐ வெளியிட்டிருந்தது.

உச்ச நீதிமன்றம், எஸ்.பி.ஐ.
2019 - 24 | 22,217 தேர்தல் பத்திரங்கள் விற்பனை... 10 நாளில் 3,346... முழு விவரங்களையும் அளித்த SBI!
கூகுள்
கூகுள்கூகுள்

இந்தநிலையில், தேர்தல் பத்திரங்கள் விற்பனை மற்றும் அதனை பணமாக்கும் செயல்முறை குறித்த நிலையான வழிகாட்டு நடைமுறைகளை தெரிவிக்கக் கோரி அஞ்சலி பரத்வாஜ் என்பவர், தகவல் அறியும் சட்டத்தின் கீழ் விண்ணப்பித்திருந்தார். இதற்கு பதிலளித்துள்ள எஸ்பிஐ வங்கி, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ், வணிக ரகசியங்களை வெளியிட விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாகக் கூறி, விவரங்களை வெளியிட மறுத்துள்ளது.

தேர்தல் பத்திரங்கள் தொடர்பான அனைத்து விவரங்களையும் வெளியிட உச்சநீதிமன்றம் உத்தரவிட்டபோதும், வழிகாட்டு நடைமுறைகளை வெளியிட எஸ்பிஐ மறுத்துள்ளது அதிர்ச்சி அளிப்பதாக அஞ்சலி பரத்வாஜ் தெரிவித்துள்ளார்.

உச்ச நீதிமன்றம், எஸ்.பி.ஐ.
வயநாட்டில் வேட்புமனு தாக்கல் செய்தார் ராகுல்.. பிரமாண்ட பேரணியில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com