‘அடுத்த 3 மணி நேரத்திற்குள் 13 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!’ - வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தில் இன்று 13 மாவட்டங்களில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மழை
மழைpt web

கோடை வெயில் வாட்டி வதைத்த நிலையில் தற்போது சில இடங்களில் மழை பெய்வதால் மக்கள் கோடை வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பி வருகின்றனர். தென் மாவட்டங்களில் திடீர் கனமழை பெய்ததால் குளிர்ச்சியான சூழல் நிலவியது. இதனால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

மாதிரிப்படம்
மாதிரிப்படம்pt web

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மலைப்பகுதிகளில் அக்னி நட்சத்திரம் தொடங்கியதில் இருந்து, மாறி மாறி கோடை மழை பெய்து வருகிறது. தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி மற்றும் பெரியகுளம் பகுதிகளில் சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது. விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் கடந்த 3 தினங்களாக வெப்பம் வாட்டி வதைத்து வந்த நிலையில், இரவு சுமார் அரை மணி நேரத்திற்கும் மேல் பரவலாக மழை பெய்ததால் குளிர்ச்சியான சூழல் நிலவியது.

மழை
ஒகேனக்கல்: மருத்துவமனைக்கு சென்ற நிலையில் இரவோடு இரவாக அடித்து நொறுக்கப்பட்ட வீடுகள்

13 மாவட்டங்களுக்கு மழை

இந்நிலையில் தமிழகத்தில் இன்று 13 மாவட்டங்களில் மழை பெய்யும் என வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது. அதன்படி அடுத்த 3 மணி நேரத்திற்குள் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகை, தஞ்சை, திருவாரூர், ராமநாதபுரம், நெல்லை, கன்னியாகுமரியில் இன்று மழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி காரைக்காலிலும் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதில் சென்னையில் தற்போது லேசான மழை பெய்தது. இதனால் சென்னைவாசிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

மழை
நாகை எம்பி செல்வராஜ் காலமானார்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com