நாகை எம்பி செல்வராஜ் காலமானார்

சிறுநீரக கோளாறு, நுரையீரல் தொற்று, இதய பிரச்சனையால் அவதியுற்றதன்பேரில் கடந்த மூன்றாம் தேதி உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்ட எம்.பி. செல்வராஜ், இன்று அதிகாலை காலமானார்.
MP Selvaraj
MP Selvarajpt desk

செய்தியாளர்: சுகன்யா மெர்சி பாய்

நாகை மக்களவைத் தொகுதி எம்.பி.யாக பொறுப்பு வகிக்தவர் எம்.செல்வராஜ் (67). இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியக் குழு உறுப்பினராகவும் இருந்த இவர், திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அருகேயுள்ள சித்தமல்லியை சேர்ந்தவர். இவர், ஏற்கெனவே சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்திருந்த நிலையில், தொடர் சிகிச்சையில் இருந்து வந்தார்.

MP Selvaraj
MP Selvarajpt desk

இந்நிலையில், சிறுநீரக கோளாறு, நுரையீரல் தொற்று, இதயப் பிரச்னையால் அவதியுற்று வந்த இவர், கடந்த 3ஆம் தேதி மியாட் மருத்துவமனையில் உள் நோயாளியாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை எம்.பி செல்வராஜ் காலமானார்.

MP Selvaraj
நெல்லை காங்கிரஸ் நிர்வாகி ஜெயக்குமார் உடல் மீட்கப்பட்ட இடத்தில் கிடைத்த புதிய ஆதாரம்!

நாகை பாராளுமன்றத் தொகுதியில் இருந்து 1989, 1996, 1998 மற்றும் 2019 ஆண்டுகளில் நடைபெற்ற தேர்தல்களில் செல்வராஜ் வெற்றி பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com