“நெருங்கிய நண்பர் என்பதால் அதானியிடம் அனைத்து துறைகளையும் ஒப்படைத்திருக்கிறார் மோடி” - ராகுல் காந்தி

I.N.D.I.A. கூட்டணி ஆட்சிக்கு வந்த உடன் நாடு முழுவதும் காலியாக உள்ள 30 லட்சம் மத்திய அரசு பணியிடங்கள் நிரப்பப்படும் என்று காங்கிரஸ் மூத்தத் தலைவர் ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.
அதானி - மோடி - காங்கிரஸ் மூத்தத் தலைவர் ராகுல்காந்தி
அதானி - மோடி - காங்கிரஸ் மூத்தத் தலைவர் ராகுல்காந்திபுதிய தலைமுறை

காங்கிரஸ் மூத்தத்தலைவர் ராகுல்காந்தி, மக்களவைத்தேர்தல் பரப்புரைக்காக நேற்று தமிழகம் வந்தார். அப்போது ‘I.N.D.I.A. கூட்டணி ஆட்சிக்கு வந்த உடன் நாடு முழுவதும் காலியாக உள்ள 30 லட்சம் மத்திய அரசு பணியிடங்கள் நிரப்பப்படும். நீட் உள்ளிட்ட தேர்வுகள் குறித்து மாநில அரசே முடிவு செய்து கொள்ளலாம்’ என்று தெரிவித்தார்.

முதற்கட்டமாக நெல்லை பாளையங்கோட்டையில் உள்ள பெல் மைதானத்தில் நடைபெற்ற பரப்புரைக்கூட்டத்தில் திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து ராகுல் காந்தி வாக்கு சேகரித்தார். அப்போது பேசிய அவர், “நான் தமிழ்நாட்டு மக்களை பெரிதும் நேசிக்கிறேன். தமிழ்நாட்டுடனான எனது உறவு அரசியல் ரீதியானது அல்ல, குடும்ப உறவு.

ராகுல் காந்தி
ராகுல் காந்தி

நாட்டில் உள்ள இளைஞர்கள் 83% பேர் வேலையில்லா திண்டாட்டத்தை சந்திக்கிறார்கள். பெரும் கோடீஸ்வரர்களின் 16 லட்சம் கோடி ரூபாய் கடனை தள்ளுபடி செய்த பிரதமர் மோடி, விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்ய தயாராக இல்லை. தனது நெருங்கிய நண்பர் என்பதால் அதானியிடம் அனைத்து துறைகளும் ஒப்படைத்திருக்கிறார்.

அதானி - மோடி - காங்கிரஸ் மூத்தத் தலைவர் ராகுல்காந்தி
அமேதியில் மீண்டும் ராகுல்.. ரேபரேலியில் பிரியங்கா.. உ.பியில் காங்கிரஸ் போடும் மெகா கணக்கு!

மேலும், I.N.D.I.A. கூட்டணி ஆட்சிக்கு வந்தவுடன் அனைத்து இளைஞர்களுக்கும் வேலைவாய்ப்பு உருவாக்கித்தரப்படும். கல்விக்கொள்கை மாநில அரசுகளின் வசமே அளிக்கப்படும். வறுமையின் பிடியில் உள்ள குடும்பங்களின் பெண்களுக்கு உரிமைத்தொகை வழங்கப்படும்.

அரசு வேலைவாய்ப்புகளில் பெண்களுக்கு 50% இடஒதுக்கீடு, நாடாளுமன்ற, சட்டமன்றத் தேர்தல்களில் 50% இடஒதுக்கீடு பின்பற்றப்படும். விவசாயிகளைப்போல மீனவர்களும் முக்கியம் என்பதால் காங்கிரஸ் தரப்பில் மீனவர்களுக்கான தனி தேர்தல் அறிக்கை தயார் செய்யப்பட்டுள்ளது. நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தல் கலாசாரம், மொழி உள்ளிட்டவற்றை காப்பாற்றுவதற்காக நடைபெறும் யுத்தம்” என்று தெரிவித்துள்ளார்.

அதானி - மோடி - காங்கிரஸ் மூத்தத் தலைவர் ராகுல்காந்தி
"அண்ணனுக்கு ஒட்டு போடுங்கள் அப்பாவின் ஆத்மா சாந்தி அடையும்" - உருக்கமாக பேசிய சண்முக பாண்டியன்!

இப்படியாக காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள வாக்குறுதிகளை தனது உரையின்போது தெரிவித்த ராகுல்காந்தி, தமிழ்மொழி, தமிழர் பண்பாடு குறித்து பெருமையுடன் தனது உரையில் குறிப்பிட்டார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com