"அண்ணனுக்கு ஒட்டு போடுங்கள் அப்பாவின் ஆத்மா சாந்தி அடையும்" - உருக்கமாக பேசிய சண்முக பாண்டியன்!

விருதுநகரில் "என்னுடைய அண்ணனுக்கு ஒட்டு போடுங்கள் என்னுடைய அப்பா ஆத்மா சாந்தி அடையும்" என நடிகர் சண்முக பாண்டியன் பேசியுள்ளார்.
சண்முக பாண்டியன்
சண்முக பாண்டியன்PT WEB

விருதுநகர் நாடாளுமன்றத் தொகுதியில் அதிமுக கூட்டணியில் சார்பில், போட்டியிடும் தேமுதிக வேட்பாளர் விஜய பிரபாகரனுக்கு ஆதரவாக அவருடைய தம்பி சண்முக பாண்டியன் அருப்புக்கோட்டை நகர்ப் பகுதியில் வாக்கு சேகரித்தார். முதல் முறையாகத் தேர்தல் பிரச்சாரம் செய்யத் திறந்த வெளி வாகனத்தில் வந்த சண்முக பாண்டியனுக்குக் கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

அப்போது, திறந்த வெளி வாகனத்தில் நின்றபடியே பேசிய சண்முக பாண்டியன், "இதுதான் என்னுடைய முதல் தேர்தல் பிரசாரம். என்னுடைய அண்ணனுக்காக நான் வந்துள்ளேன். என்னுடைய அப்பா கோவிலில் இருக்கும் போது பலர் என்னிடம் கூறினார்கள். ஒரு முறையாவது அப்பாவை வெற்றி பெற வைத்திருக்கலாம் என வருத்தப்பட்டார்கள். என்னுடைய அப்பாவை வெற்றிபெற வைக்கவில்லை என வருத்தப்பட வேண்டாம்.‌ அச்சு அசலாக என்னுடைய அப்பாவை போல் இருக்கும், என்னுடைய அப்பா சாயலில் இருக்கும் என்னுடைய அண்ணனை வெற்றி பெற வைத்தாலும் என் அப்பா ஆத்மா சாந்தி அடையும்" என்றார்.

கண்ணீர் விட்டு அழுத 
மூதாட்டி
கண்ணீர் விட்டு அழுத மூதாட்டி

அப்போது, சண்முக பாண்டியனின் பேச்சைக் கேட்டுக்கொண்டிருந்த பெண் ஒருவர் அவரை பார்த்து கண்ணீர் விட்டு அழுதார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com