மக்களவை தேர்தல் 2024 | இன்று தமிழ்நாடு வருகிறார் ராகுல் காந்தி

மக்களவை தேர்தல் பரப்புரைக்காக காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி இன்று தமிழகம் வருகிறார்.
 ராகுல் காந்தி
ராகுல் காந்திமுகநூல்

தமிழகத்தில் மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாள் நெருங்கும் நிலையில், அரசியல் கட்சித் தலைவர்கள் சூறாவளி பயணம் மேற்கொண்டு பரப்புரை செய்து வருகின்றனர். இந்நிலையில், காங்கிரஸ் மற்றும் திமுக வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்ட, காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி இன்று தமிழகம் வரவுள்ளார்.

மு.க.ஸ்டாலின் - ராகுல் காந்தி
மு.க.ஸ்டாலின் - ராகுல் காந்திகோப்புப்படம்

ஒரே நாளில் இரு இடங்களில் பரப்புரை மேற்கொள்ளும் வகையில் அவரது பயணத்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. நெல்லையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பொதுக்கூட்டத்தில் பங்கேற்கும் ராகுல் காந்தி, கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர் மற்றும் மதுரை ஆகிய எட்டு தொகுதிகளில் போட்டியிடும் I.N.D.I.A. கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பரப்புரை மேற்கொள்கிறார்.

 ராகுல் காந்தி
மக்களவை தேர்தல் 2024 | அதிமுக Vs அண்ணாமலை இடையே தொடரும் வார்த்தை யுத்தம்!

மேலும் விளவங்கோடு சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்தும் ராகுல் காந்தி பரப்புரை மேற்கொள்ளவுள்ளார். அதைத் தொடர்ந்து கோவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் இணைந்து திமுக கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக ராகுல் காந்தி பரப்புரை செய்கிறார்.

இதற்கிடையே, நெல்லையில் மேடை அமைக்கும் பணி உள்ளிட்ட முன்னேற்பாடுகளை தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை ஆய்வு செய்தார்.

 ராகுல் காந்தி
அடுத்தடுத்து தமிழ்நாட்டுக்கு வரும் பாஜக மூத்த தலைவர்கள் - மோடி முதல் ஜெ.பி.நட்டா வரை.. முழு விவரம்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com