அடுத்தடுத்து தமிழ்நாட்டுக்கு வரும் பாஜக மூத்த தலைவர்கள் - மோடி முதல் ஜெ.பி.நட்டா வரை.. முழு விவரம்!

தேர்தல் பரப்புரைக்காக 2 நாள் பயணமாக பாஜக மூத்தத் தலைவரும் மத்திய அமைச்சருமான அமித் ஷா தமிழகம் வர இருந்த நிலையில் அவரது பயணத்தில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.
நிர்மலா சீதாராமன் - ஜெ.பி.நட்டா - அமித்ஷா - மோடி - அண்ணாமலை
நிர்மலா சீதாராமன் - ஜெ.பி.நட்டா - அமித்ஷா - மோடி - அண்ணாமலைபுதிய தலைமுறை

நாடாளுமன்ற மக்களவை தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், அரசியல் தலைவர்கள் தீவிர பரப்புரைகளில் ஈடுபட்டு வருகின்றனர். மற்றொருபக்கம் வாக்குப்பதிவு எந்திரங்களில் கட்சி சின்னம் , வேட்பாளர்களின் புகைப்படம், பெயர்கள் ஒட்டும் பணிகள் தீவிரமாக நடைப்பெற்று வருகிறது. ஏப்ரல் 19-ம் தேதி முதற்கட்ட வாக்குப்பதிவு தமிழ்நாட்டில் இருந்து தொடங்க உள்ளதால், தேர்தல் களம் நாளுக்கு நாள் சூடுபிடித்து வருகிறது.

தமிழகம், புதுவையில் இருக்கும் 40 நாடாளுமன்ற தொகுதிகளிலுமே போட்டி மிகவும் கடுமையாக இருக்கிறது. திமுக, அதிமுக, நாம் தமிழர், பாஜக என்று நான்கு முனை போட்டி நிலவும் சூழலில், அந்தந்த கட்சிகளின் நட்சத்திர பேச்சாளர்கள், வேட்பாளர்கள் பரப்புரையை தீவிரப்படுத்தியுள்ளனர். அந்த வகையில், தமிழகத்தில் நாடாளுமன்ற தொகுதியில் கால் ஊன்ற நினைத்து பாஜக பரப்புரையை தீவிரப்படுத்தி வருகிறது.

நிர்மலா சீதாராமன் - ஜெ.பி.நட்டா - அமித்ஷா - மோடி - அண்ணாமலை
மீண்டும் நாம் தமிழர் கட்சிக்கு வந்த சோதனை! தேர்தல் சின்னத்தில் எழுந்த புதிய பிரச்னை!

குறிப்பாக, பாஜக கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி அடிக்கடி தமிழகத்திற்கு விசிட் அடித்து பரப்புரை மேற்கொண்டு வருகிறார். சமீபத்தில் கூட, மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தமிழகம் வந்து கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பரப்புரை மேற்கொண்டார்.

பிரதமர் மோடியும் இந்த ஆண்டில் 7-வது முறையாக நேற்று முன்தினம் தமிழகத்திற்கு வருகை தந்து 4 நாள் பயணம் மேற்கொண்டு பல்வேறு இடங்களில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.

நிர்மலா சீதாராமன் - ஜெ.பி.நட்டா - அமித்ஷா - மோடி - அண்ணாமலை
மக்களவை தேர்தல்|”ஒரு டீக்கடைகாரருக்கு மேட்டுப்பாளையம் வந்தால் மகிழ்ச்சியாக இருக்காதா?”- பிரதமர் மோடி

அந்த வரிசையில், தேர்தல் பரப்புரைக்காக 2 நாள் பயணமாக பாஜக மூத்தத் தலைவரும் மத்திய அமைச்சருமான அமித் ஷா தமிழகம் வர இருக்கிறார். இதற்காக நாளை (ஏப்ரல் 12ஆம் தேதி) பிற்பகல் 3 மணிக்கு மதுரை வந்து, அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் சிவகங்கை செல்ல திட்டமிட்டிருந்தார் அமித்ஷா. தொடர்ந்து மதுரை, திருச்சி மற்றும் நாகை உள்ளிட்ட இடங்களில் அவர் பரப்புரை செய்ய இருந்தார்.

இந்நிலையில் நாளை (ஏப்.12) சிவகங்கையில் திட்டமிடப்பட்டிருந்த அமித்ஷாவின் வாகனப் பேரணி தற்போது ரத்தாகியுள்ளது. அதற்கு பதிலாக மதுரையில் பாஜக வேட்பாளர் இராமஸ்ரீனிவாசனை ஆதரித்து நாளை மாலை வாகன பரப்புரை மேற்கொள்கிறார் அமித்ஷா. தொடர்ந்து குமரி மாவட்டத்திற்கு தேர்தல் பிரசாரத்திற்கு செல்கிறார் அமித்ஷா.

நிர்மலா சீதாராமன் - ஜெ.பி.நட்டா - அமித்ஷா - மோடி - அண்ணாமலை
மேற்குவங்க முன்னாள் தலைமை செயலர் பி.எஸ் ராகவன் சென்னையில் காலமானார்!

தேர்தல் வாக்குப்பதிவு நாள் நெருங்கும் நிலையில், பிரதமர் மோடி மீண்டும் வரும் 14, 15ம் தேதிகளில் தமிழ்நாட்டுக்கு வந்து பரப்புரை மேற்கொள்ள இருக்கிறார்.

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாpt web

போலவே மேட்டுப்பாளையத்தில் ஏப்.14ம் தேதி நீலகிரி தொகுதி பாஜக வேட்பாளர் எல்.முருகனை ஆதரித்து ரோடு ஷோ நடத்துகிறார் பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா.

இதேபோல மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனும் நாளை தேர்தல் பிரசாரத்துக்காக தமிழ்நாடு வர உள்ளார். சிதம்பரம், தஞ்சை, கோவை தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து வாக்கு சேகரிக்க இருக்கிறார் நிர்மலா சீதாராமன்.

நிர்மலா சீதாராமன் - ஜெ.பி.நட்டா - அமித்ஷா - மோடி - அண்ணாமலை
“மீண்டும் மோடி வந்தால் இந்திய வரைபடமே மாறும்” - நிர்மலா சீதாராமனின் கணவர் பரகலா பிரபாகர் எச்சரிக்கை!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com