விருதுநகர் | மோடி பிரதமராகவும், ராதிகா வெற்றிபெறவும் வேண்டி சரத்குமார் அங்கப்பிரதட்சணம்!

3வது முறை பிரதமராக மோடி வெற்றி பெறவும், விருதுநகர் நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளர் ராதிகா வெற்றி பெறவும் வேண்டி, விருதுநகர் ஸ்ரீ பராசக்தி மாரியம்மன் கோயிலில் நடிகர் மற்றும் பாஜக பிரமுகர் சரத்குமார் அங்கப்பிரதட்சணம் செய்து, சிறப்பு பூஜைகள் மேற்கொண்டார்
சரத்குமார் அங்கப்பிரதட்சணம்
சரத்குமார் அங்கப்பிரதட்சணம்புதிய தலைமுறை

செய்தியாளர்: மணிகண்டன்

தமிழகத்தில் கடந்த 19ம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்றது. அந்த தேர்தலில், விருதுநகர் நாடாளுமன்ற தொகுதியில் பாஜக வேட்பாளராக ராதிகா சரத்குமார் போட்டியிட்டார். இதையொட்டி, அவரது கணவரும் பாஜக-வின் முக்கிய தலைவருமான சரத்குமார், விருதுநகர் நாடாளுமன்ற தொகுதியில் சூறாவளி பிரசாரம் மேற்கொண்டார்.

ராதிகா சரத்குமார்
ராதிகா சரத்குமார்ட்விட்டர் | @realradikaa

இந்த நிலையில், நாளை நாடாளுமன்றத் தேர்தலில் பதிவான வாக்குகள் நாடு முழுவதும் எண்ணப்பட உள்ளன. அதில் விருதுநகரில் ராதிகா வெற்றி பெற வேண்டும் என கோவிலில் வேண்டியிருக்கிறார் சரத்குமார்.

சரத்குமார் அங்கப்பிரதட்சணம்
இன்றைய காலை தலைப்புச் செய்திகள் | தொடங்கிய உலகக் கோப்பை கிரிக்கெட் முதல் நாளை வாக்கு எண்ணிக்கை வரை!

இதற்காக மிகவும் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவிலில் சரத்குமார் அங்கப்பிரதட்சணம் செய்துள்ளார். ராதிகா வெற்றி பெற வேண்டும் எனவும், 3வது முறையாக நரேந்திர மோடியே பிரதமராக வேண்டும் எனவும் விருதுநகர் ஸ்ரீ பராசக்தி மாரியம்மன் கோவிலில் வேண்டிக்கொண்டு, அங்கப்பிரதட்சணம் செய்தார் சரத்குமார்.

இதில் சரத்குமாருடன் இணைந்து ராதிகாவும் சாமி தரிசனம் செய்தார். தொடர்ந்து இருவரும் கோவிலில் சிறப்பு பூஜைகள் செய்தனர். இதுதொடர்பான காட்சிகள், இணையத்தில் வைரலாகி வருகின்றன.

சரத்குமார் அங்கப்பிரதட்சணம்
மதுரை: நீதிபதி வீட்டுக்கு அழைத்துச் செல்லப்பட்ட விசாரணை கைதி தப்பியோட்டம்...

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com