மதுரை: நீதிபதி வீட்டுக்கு அழைத்துச் செல்லப்பட்ட விசாரணை கைதி தப்பியோட்டம்...

மதுரையில் நீதிபதி வீட்டுக்கு அழைத்துச் செல்லப்பட்ட விசாரணை கைதி தப்பியோடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Accused
Accusedpt desk

செய்தியாளர்: மணிகண்டபிரபு

மதுரை எஸ்.எஸ். காலனி பகுதியைச் சேர்ந்த தீபன்ராஜ் (25) உட்பட 2 பேர் கொலை முயற்சி வழக்கு தொடர்பாக நேற்று மாலை கைது செய்யப்பட்டனர். தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்ட பின்னர் இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்காக அழைத்துச் சென்றனர்.

நேற்று நீதிமன்றம் விடுமுறை என்பதால் இருவரையும் மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் எதிரேயுள்ள நீதிபதி வீட்டில் ஆஜர்படுத்தவதற்காக எஸ்.எஸ்.காலனி காவல்துறையினர் அழைத்துச் சென்றனர்.

Police station
Police stationpt desk

சென்ற இடத்தில் வாகனத்தில் இருந்து இரு கைதிகளும் இறங்கியபோது, திடீரென காவல்துறையினரின் பிடியிலிருந்து தீபன்ராஜ் தப்பியோடினார். அவரை பின் தொடர்ந்த காவல்துறையினர் எச்சரித்தபடி விரட்டிச் சென்றனர். இந்நிலையில் அவர், காடுபோன்ற பகுதிக்குள் குதித்து தப்பியோடினார்.

Accused
மதுரை: TTF வாசன் நாளை விசாரணைக்கு ஆஜராக அண்ணாநகர் போலீசார் நோட்டீஸ்!

இதையடுத்து தப்பியோடிய தீபனை கண்டுபிடிப்பதற்காக அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்கள் முழுமையாக கண்காணிக்கப்பட்டு அந்த பகுதி முழுவதிலும் ரோந்து காவல் துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து கோ.புதூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com