“இளைய சமுதாயத்திற்கு என்ன சொல்லப்போகிறோம்?”- புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை கேள்வி!

“இருவருக்கும் இடையே வெவ்வேறு கருத்துக்கள் இருக்கலாம், கருத்து மோதல் இருக்கலாம். ஒருவர் கருத்தை ஒருவர் ஒப்புக்கொள்ள வேண்டும் என்பதில்லை. ஆனால் அதற்காக அரசு விழாக்களில் கலந்து கொள்ளப்போவதில்லை என்றால் இளைய சமுதாயத்திற்கு எதை சொல்ல போகின்றோம்”- தமிழிசை

“நீட் தேர்விற்கு விலக்கு பெறமுடியாது என்று தெரிந்தும் பொய் வாக்குறுதி அளித்துள்ளார்கள்” என புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் திமுக அரசை விமர்சித்துள்ளார்.

தமிழிசை
தமிழிசை

புதுச்சேரி அரசு பொறியியல் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா இன்று நடைபெற்றது. இதில் ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன், முதல்வர் ரங்கசாமி, சபாநாயகர் செல்வம் உள்ளிட்ட அமைச்சர்கள் கலந்து கொண்டார்கள். இந்த விழாவில் கலந்து கொண்ட ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் ‘தமிழக ஆளுநர் ரவி அளிக்கும் தேநீர் விருந்தை முதல்வர் ஸ்டாலின் புறக்கணிக்கப்போவதாக அறிவித்துள்ளது குறித்த உங்கள் கருத்து என்ன?’ என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

“இளைய சமுதாயத்திற்கு எதை சொல்ல போகின்றோம்?”

அதற்கு பதிலளித்த அவர், “அரசாங்கத்தில் நடைபெறும் விழாக்கள் சிறப்பாக நட்புடன் நடைபெற வேண்டும் என்பது எனது கருத்து. தெலங்கானாவில் நான் அழைக்கும் நிகழ்ச்சிகளுக்கு அம்மாநில முதல்வர் வருவதில்லை. அதை கவலையோடு எதிர்கொள்கின்றேன். ஏனெனில் வருங்கால சந்ததியினருக்கு இதன்மூலம் நாம் என்ன சொல்ல போகின்றோம்? இருவருக்கும் இடையே வெவ்வேறு கருத்துக்கள் இருக்கலாம், கருத்து மோதல் இருக்கலாம். ஒருவர் கருத்தை ஒருவர் ஒப்புக்கொள்ள வேண்டும் என்பது இல்லை. ஆனால் அதற்காக அரசு விழாக்களில் கலந்து கொள்ளப்போவதில்லை என்றால் இளைய சமுதாயத்திற்கு எதை சொல்ல போகின்றோம் என்ற ஆழ்ந்த கவலை எனக்கு உள்ளது”

தமிழிசை சௌந்தரராஜன்
“வரலாற்றுக்கு புறம்பாக, உண்மையை மறைத்து பேசுவது திருநாவுக்கரசருக்கு அழகல்ல” - ஜெயக்குமார்

“நீட்டை வைத்து அரசியல் செய்கின்றார்கள் என்பது மிகவும் கவலையளிக்கின்றது. நான் ஆளுநராக சொல்லவில்லை, தமிழகத்தில் வாக்களித்த வாக்காளராக சொல்கின்றேன். நீட் தேர்வை ரத்து செய்வோம் என்றுதானே வாக்குறுதி கொடுத்து ஆட்சிக்கு வந்தார்கள். முடிந்ததா? நீட் தேர்விற்கு விலக்கு பெறமுடியாது என்று தெரிந்தும் பொய் வாக்குறுதி அளித்துள்ளார்கள்” என்று விமர்சித்தார்.

“மாணவர்களின் தன்னம்பிக்கையை குலைத்து விட வேண்டாம்”

“நீட் தேர்வைப்பற்றி விமர்சனம் செய்யும் தமிழக அமைச்சர் (உதயநிதி), வேண்டுமென்றால் நீதிமன்றம் செல்லட்டும். அதைவிடுத்து இதில் விளையாட வேண்டாம். நீட் விவகாரத்தில் எதிர்மறை கருத்துக்களை பரப்ப வேண்டாம், தமிழக மாணவர்கள் வெற்றி பெற ஆரம்பித்து விட்டார்கள். மாணவர்களின் தன்னம்பிக்கையை குலைத்து விட வேண்டாம்” என்றார்.

தமிழிசை சௌந்தரராஜன்
“ஆளுநர் தமிழ்நாட்டு மக்களின் மனநிலையை புரிந்து கொள்ளவில்லை” - அமைச்சர் உதயநிதி

தொடர்ந்து, ”ஜெயலலிதா தாக்கப்பட்ட விவகாரத்தில் திருநாவுக்கரசர் மாற்றி பேசுகின்றார்” என தமிழிசை செளந்தரராஜன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

தமிழிசை சௌந்தரராஜன்
“வரலாற்றுக்கு புறம்பாக, உண்மையை மறைத்து பேசுவது திருநாவுக்கரசருக்கு அழகல்ல” - ஜெயக்குமார்

“தியாகிகளை நினைவுகூற வேண்டும்”

முன்னதாக பட்டமளிப்பு விழாவில் பேசிய ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன், “சுதந்திரத்திற்கு காரணம் சுதந்திரப்போராட்ட வீரர்கள் தான். ஜெயிலர் படம் பார்த்தவர்கள் எத்தனை பேர் என்பது எனக்கு தெரியாது. நமது சுதந்திரத்திற்காக ஜெயிலுக்கு போனவர்களை பற்றி எத்தனை பேர் தெரிந்திருக்கின்றார்கள் என்றும் தெரியாது. நமது சுதந்திரத்திற்காக சிறைக்கு சென்ற தியாகிகளை நாம் நினைவு கூற வேண்டும்” என பேசினார்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com