“வரலாற்றுக்கு புறம்பாக, உண்மையை மறைத்து பேசுவது திருநாவுக்கரசருக்கு அழகல்ல” - ஜெயக்குமார்

“திருநாவுக்கரசரை மக்களுக்கு அறிமுகப்படுத்தியது புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களும், புரட்சித்தலைவி ஜெயலலிதா அம்மாவும்தான்”- ஜெயக்குமார்

அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர், ஏற்கெனவே அ.தி.மு.க விலிருந்து புரட்சித் தலைவரால் அடையாளம் காட்டப்பட்டவர். புரட்சித் தலைவி அம்மா அவர்களால்கூட அடையாளம் காட்டப்பட்டவர்.

அப்படிபட்ட அவர் கடமைப்பட்டிருக்க வேண்டியது அ.தி.மு.க-விற்கு தான். ஆனால் அதைவிடுத்து இன்று உண்ட வீட்டிற்கே ரெண்டகம் செய்கின்ற வேலையை செய்துவருகிறார். அவர் அதிமுகவில் இருந்ததை நினைத்துப் பார்த்தால் வருத்தமும் வேதனையும் தோன்றுகிறது. வரலாற்றுக்கு புறம்பான வகையில் உண்மையை மறைத்து பேசுவது திருநாவுக்கரசருக்கு அழகல்ல” என்றுள்ளார்.

முன்னதாக மார்ச் 25, 1989ல் தமிழ்நாடு சட்டசபையில் நிதிநிலை அறிக்கையை முதல்வர் கருணாநிதி வாசிக்கும் போது என்ன நிகழ்ந்தது என்பது குறித்தும் ஜெயலலிதா தாக்கப்பட்டாரா என்பது குறித்தும் திருநாவுக்கரசர் எம்.பி பேட்டியளித்திருந்தார். அதற்கு பதிலளிக்கும் வகையில், ஜெயக்குமார் இவ்வாறு இன்று கருத்து தெரிவித்துள்ளார். திருநாவுக்கரசரின் அந்தப் பேட்டியை, இங்கு க்ளிக் செய்து காணலாம்.

தொடர்புடைய முந்தைய செய்திகள்...

Jayakumar
“ஜெயலலிதாவை அவமதித்தவர்கள்தானே நீங்கள்? திமுக மறந்துவிட்டதா?”- மக்களவையில் நிர்மலா சீதாராமன் பேச்சு
Jayakumar
“ஜெயலலிதா அவராகவே நடத்திக்கொண்ட நாடகம்” - நிர்மலா சீதாராமன் கருத்துக்கு முதலமைச்சர் பதில்

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com