பிடிஆர் பழனிவேல் தியாகராஜன்
பிடிஆர் பழனிவேல் தியாகராஜன்Pt web

நட்சத்திரத் தொகுதி| பிடிஆர்-க்கு ஹாட்ரிக் வெற்றியைத் தருமா மதுரை மத்தி.. கள நிலவரம் என்ன?

’நட்சத்திரத் தொகுதி’ பகுதியில், அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் மதுரை மத்தி தொகுதி குறித்துப் பார்க்கலாம்.
Published on

மதுரை மத்திய தொகுதியோடு பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் குடும்பத்துக்கு நீண்ட காலத் தொடர்பு உண்டு. இவரது தாத்தா பி.டி.ராஜன் நீதிக்கட்சி காலத்தில் சென்னை மாகாண முதல்வராக இருந்தவர். தந்தை பி.டி.ஆர் பழனிவேல் ராஜனுக்கு வெற்றியைத் தந்த தொகுதி மதுரை மத்தி. தந்தையின் மறைவுக்குப் பிறகு அரசியலுக்கு வந்த பழனிவேல் தியாகராஜனுக்கும், 2016 மற்றும் 2021 தேர்தல்களில் தொடர் வெற்றியை தந்துள்ளது இந்த தொகுதி. 2016 சட்டமன்றத் தேர்தலில் முதல்முறையாகக் களமிறங்கிய பி.டி. ஆர்.பழனிவேல் தியாகராஜன், 6 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வென்றார். 2021 தேர்தலில் சுமார் 34 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றியைப் பதிவு செய்தார்.

pTR & MK Stalin
pTR & MK Stalin web

1957இல் உருவான மதுரை மத்தி தொகுதியில், 7 முறை திமுகவும், 4 முறை காங்கிரஸும், ஒரே ஒரு முறை அதிமுகவும் வென்றுள்ளன. மதுரையின் அடையாளமான மீனாட்சியம்மன் கோயில் அமைந்துள்ள இத்தொகுதி, பழமை மாறாத, அதே சமயம் வணிகம் செழிக்கும் பகுதியாகும். 6 மாதங்களுக்கு ஒருமுறை தனது எம்எல்ஏ பணிகளை அறிக்கையாக மக்களிடம் சமர்ப்பிப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளார் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன்.

பிடிஆர் பழனிவேல் தியாகராஜன்
வில்லிவாக்கம், தி.நகர்.. விஜய் தேர்தல் பரப்புரை ரத்து! காரணம் என்ன?

கடந்த 5 ஆண்டுகளில் ஸ்மார்ட் சிட்டி திட்டங்கள் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதில் அதிக கவனம் செலுத்தியுள்ளார் அவர். ஆனாலும், போக்குவரத்து நெரிசல் உள்ளிட்ட நீண்ட காலப் புகார்கள் நீடிக்கின்றன. மூன்றாவது முறையாக மதுரை மத்தியில் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் களமிறங்குகிறார். இந்த முறை அதிமுக கூட்டணியில் உள்ள புதிய நீதிக்கட்சி சார்பில் களமிறங்கியுள்ளார் நடிகரும் இயக்குநருமான சுந்தர் சி. முதல்முறையாகத் தேர்தலில் களமிறங்கும் அவர், இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுவது, தொகுதியில் விறுவிறுப்பைக் கூட்டியுள்ளது. மேலும், நாதக சார்பில் அப்துல் ஹக்கிம், தவெக சார்பில் முஸ்தபா ஆகியோர் களமிறங்குவதால் தேர்தல் களத்தில் அனல் பறக்கிறது.

பிடிஆர் பழனிவேல் தியாகராஜன்
காங்கிரஸில் தொடரும் சர்ச்சை.. மேலூர் வேட்பாளருக்கு எதிர்ப்பு.. கண்டித்து போஸ்டர்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com