தூய்மை பணியாளர்கள் போராட்டம், பூவுலகின் நண்பர்கள்
தூய்மை பணியாளர்கள் போராட்டம், பூவுலகின் நண்பர்கள்எக்ஸ்

”தூய்மைப் பணியாளர்களைத் தனியாருக்குத் தாரைவார்க்கும் முடிவைக் கைவிடுக!” - பூவுலகின் நண்பர்கள்!

தூய்மைப் பணியாளர்களை முற்றிலும் தனியார் நிறுவனங்களிடம் ஒப்படைக்க முயலும் செயல் துளியும் ஏற்புடையதல்ல, எனவே, தூய்மைப் பணியாளர்களை தனியாரிடம் தாரைவார்க்கும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும் என ’பூவுலகின் நண்பர்கள்’ அமைப்பு வலியுறுத்தியுள்ளது.
Published on

சென்னை ரிப்பன் மாளிகை முன்பு கடந்த ஆகஸ்ட் 1 ஆம் தேதி தொடங்கிய தூய்மைப் பணியாளர்கள் போராட்டம் இன்றுடன் 12 நாட்களை நிறைவு செய்கிறது. “தங்களின் பணியை தனியார் வசம் ஒப்படைக்கக் கூடாது. கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக பணிபுரியும் தங்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். தங்களின் சம்பளத்தைக் குறைக்கக் கூடாது” ஆகிய 3 பிரதான கோரிக்கைகளை முன்வைத்தே தூய்மைப் பணியாளர்கள் இரவு பகலாக மழை, வெயிலைப் பொருட்படுத்தாமல் போராடி வருகிறார்கள்.

சென்னையில் மொத்தம் 15 மண்டலங்கள் உள்ளன. அதில், 10 மண்டலங்களுக்கான தூய்மைப்பணிகள் கடந்த 2020ம் ஆண்டே தனியார் வசம் ஒப்படைக்கப்பட்டன. 2021 ஆம் ஆண்டு 7-வது மண்டலம் தனியார் வசம் ஒப்படைக்கப்பட்டபோது அதை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டது. இதனையடுத்து தூய்மை பணியை தனியார் வசம் ஒப்படைக்க நீதிமன்றத்தில் தடை வாங்கியிருந்த பிறகும் சென்னை மாநகராட்சி நிர்வாகம் அம்மண்டலங்களை தனியார் வசம் ஒப்படைப்பதிருப்பதே போராட்டத்திற்கான முக்கிய காரணி. இந்தப் போராட்டத்திற்கு பல்வேறு தரப்பினரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். நேரில் சென்று பலரும் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

தூய்மை பணியாளர்கள் போராட்டம், பூவுலகின் நண்பர்கள்
தூய்மைப் பணியாளர் போராட்டம் | ‘முதல்வர் சொன்னது இதுதான்’ - விரிவாக விளக்கிய கே.என்.நேரு!

இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக ‘பூவுலகின் நண்பர்கள்’ அமைப்பினர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

அந்த அறிக்கையில், “சென்னைப் பெருநகர மாநகராட்சி முழுவதும் நாளொன்றுக்கு 6 ஆயிரம் டன் அளவிலான குப்பைகள் உருவாகின்றன. இக்குப்பைகளைக் கையாளவும், சுகாதாரம் சார்ந்த பிற பணிகளுக்காகவும், மாநகரம் முழுவதும் சுமார் 18 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்கள் பணிபுரிகிறார்கள். புயல், வெள்ளம், வெப்ப அலைகள் போன்ற இயற்கை சீற்றங்கள், கொரோனா போன்ற பெருந்தொற்று காலங்கள், இன்னும் பிற இக்கட்டான தருணங்களிலும், தங்கள் உயிருக்கு ஆபத்தான சூழ்நிலைகளில், மாநகரின் சுகாதாரத்தை உறுதிபடுத்தவும், மக்கள் நலனைப் பேணவும் மிகத் தீவிரமாக உழைக்கிறார்கள் தூய்மைப் பணியாளர்கள்.

தூய்மை பணியாளர்கள் போராட்டம், பூவுலகின் நண்பர்கள்
மாணவிகளை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கு.. கராத்தே பயிற்சியாளர் கெபிராஜ் குற்றவாளி என தீர்ப்பு!

2021ம் ஆண்டு, மாநகரிலுள்ள 15 மண்டலங்களில் 10 மண்டலங்களுக்கான தூய்மைப் பணிகள் பலத்த எதிர்ப்புகளுக்கு மத்தியிலும் தனியார்மயமாக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தற்போதைய முதல்வரும், அப்போதைய எதிர்கட்சித் தலைவருமான திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் கடுமையான விமர்சனத்தை முன்வைத்திருந்தார். அதோடு மட்டுமல்லாமல், தூய்மைப் பணியாளர்களின் பணிப் பாதுகாப்பு மற்றும் சமூக நலன் குறித்து ஒரு சில வாக்குறுதிகளும் திமுகவின் தேர்தல் அறிக்கையில் (வாக்குறுதி எண் 153,281, 282, 283, 284, 285) இடம் பெற்றிருந்தன.

தூய்மை பணியாளர்கள் போராட்டம், பூவுலகின் நண்பர்கள்
தூய்மை பணியாளர்கள் போராட்டம், பூவுலகின் நண்பர்கள்எக்ஸ்

இந்நிலையில், இதுவரை தனியார்மயமாக்கப்பட்ட 10 மண்டலங்களைத் தாண்டி ராயபுரம் (மண்டலம் 5) மற்றும் தி.ரு.வி.க நகர் (மண்டலம் 6) ஆகிய, மேலும் இரண்டு மண்டலங்களையும், தனியார்மயமாக்கி தற்போது, தேசிய நகர்புற வாழ்வாதார இயக்கத்தின் கீழ் பணிபுரிந்து வரும் தூய்மைப் பணியாளர்களை முற்றிலும் தனியார் நிறுவனங்களிடம் ஒப்படைக்க முயலும் செயல் துளியும் ஏற்புடையதல்ல.

தனியாருக்குத் தாரை வார்க்கும் இந்நடவடிக்கை, பல்வேறு தரப்பினரின் கூற்றுப்படி, தற்போது மாதம் 23 ஆயிரம் வரை வருமானம் ஈட்டும் தூய்மைப் பணியாளர்களின் வருமானத்தினை 15 ஆயிரம் ரூபாய்க்கும் கீழாகக் குறைப்பதோடு மட்டுல்லாமல், அவர்களின் பணிப் பாதுகாப்பை கேள்விக்குள்ளாக்கி, அவர்களை மேலும் சுரண்ட வழிசெய்யும்.

தூய்மை பணியாளர்கள் போராட்டம், பூவுலகின் நண்பர்கள்
’ரேபிஸ் மரணங்களில் முதலிடம்’ | தமிழ்நாட்டில் மொத்தம் 9 லட்சம் நாய்கள் - மாநில கால்நடை துறை அறிவிப்பு

இதனை எதிர்த்து தங்களின் அடிப்படை உரிமைகளுக்காக வெயிலிலும், கொட்டும் மழையிலும் உறுதியுடன் போராடி வரும் தூய்மைப் பணியாளர்களின் போராட்டத்திற்கு மதிப்பளித்து, அவர்களின் கோரிக்கைகளுக்கு அரசு செவிசாய்க்க வேண்டும். சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்களின் வாழ்வை நேரடியாகப் பாதிக்கும், இம்முடிவைத் தமிழ்நாடு அரசாங்கம் உடனடியாகக் கைவிட்டு அவர்களின் வாழ்வாதாரத்தையும், கண்ணியத்தையும் உறுதிப்படுத்த வேண்டும். மேலும், தமிழ்நாடு அரசு தூய்மைப் பணிகளை தனியார்மயமாக்கும் கொள்கை முடிவையும் கைவிட வேண்டும்.

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தூய்மை பணியாளர்கள்
போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தூய்மை பணியாளர்கள் முகநூல்

அது மட்டுமல்லாமல் அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் சலுகைகளுக்கு இணையான பணியிடச் சலுகைகளை இவர்களுக்கும் வழங்க வேண்டுமென பூவுலகின் நண்பர்கள் சார்பில் வலியுறுத்துகிறோம். இதுவே தூய்மைப் பணியாளர்களுக்கு அரசு வழங்கும் உண்மையான கவுரவமாகவும் நீதியுமாகவும் அமையும்’ என்று குறிப்பிட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com