மாணவிகளை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கு.. கராத்தே பயிற்சியாளர் கெபிராஜ் குற்றவாளி என தீர்ப்பு!
பயிற்சி பெற வந்த மாணவிகளை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், கராத்தே பயிற்சியாளர் கெபிராஜ் குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. சென்னை அண்ணாநகரில் கராத்தே, ஜூடோ பயிற்சி பள்ளி நடத்தி வந்தவர் கெபிராஜ். அவர் தமக்கு பாலியல் தொல்லை அளித்ததாக மாணவி ஒருவர் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் கடந்த 2021ஆம் ஆண்டு கெபிராஜ் மீது வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் கைது செய்தனர்.
மேலும், சில மாணவிகள் கெபிராஜ் மீது பாலியல் புகார் அளித்ததால், இந்தப் புகாரை விசாரித்த காவல்துறையினர், கெபிராஜ் மீது பாலியல் வன்கொடுமை, கொலை மிரட்டல் உள்ளிட்ட நான்கு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர். பின்னர் கெபிராஜ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் இந்த வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டது.
இந்த வழக்கு, சென்னை மகளிர் சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த நிலையில், கராத்தே பயிற்சியாளர் கெபிராஜ் குற்றவாளி என நீதிபதி தீர்ப்பளித்தார். அவருக்கான தண்டனை விவரங்கள், செவ்வாய்க்கிழமையான இன்று அறிவிக்கப்படும் என நீதிபதி அறிவித்தார்.